பனையோலை – ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் -1

நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ‘ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல்’ என்ற செயற்பாடும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ‘ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல்’ என்ற செயற்பாடும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 01.10.2012 அன்று சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவுசெய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரன் அவர்களுடன்,  முனைவர் ஜெ. அரங்கராஜ், சுன்னாகம்  நூலகர் கே. சௌந்தரராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர், இதுபோன்ற தொடர் செயற்பாட்டில் ஈடுபட நூலகம் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்புடையவர்கள் இம்முயற்சிக்கு உதவவேண்டும் என்பதும் நூலகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

பதிவு        – சு. குணேஸ்வரன்,  படங்கள் – தி. ஹரிசாந்

தகவல்: சு. குணேஸ்வரன், 
kuneswaran@gmail.com
http://ayalveedu.blogspot.ca/2012/11/1.html