1. காதல் குறுங்கவிதைகள் – எட்மண்ட் ஸ்பென்ஸர் | தமிழ் மொழியாக்கம்: முனைவர் ர.தாரணி
அந்த கைதேர்ந்த வணிகர்கள் அருமந்தப்பொருடகளை நாடி
கடும் பிரயத்தனம் மேற்கொண்டு லாபமடைய
மேற்கிலிருந்து கிழக்கு வரை திசைகள் தோறும் திரிந்து
அலைந்து பொக்கிஷங்களத் திரட்ட அலைகிறார்கள்.
பாவம் பித்தர்கள்! அவசியமா என்ன
அத்துணை தொலைவு பயனற்ற தேடலுக்கு?
இதோ! என் மனத்தின் இனியவள் கொண்டுள்ளாள் தன்னகத்தே
தேசாதிதேசங்களில் தேடியும் கிடையா திரவியங்கள் அனைத்தும்.
நீலக்கண் மாணிக்கம், இதோ!
அவளின் அந்திரக்கண்மணி ஒளிக்கற்றைகள்
அவற்றை அற்பமாக்கிவிடும்.
ரத்த நிற கெம்பு ரூபி வேண்டுமோ, இதோ!
தகதகக்கும் அவளின் சிவந்த இதழ்கள்
செம்மணியைத்தோற்கடிக்குமோ?
நிர்மலமான சரவரிசையில் மிளிர்ந்து ஒளிரும்
அவளின் பல்வரிசை முன்நிற்கும்.
தந்தங்கள் தேவையோ? தந்தமே தலைவணங்கும்
அவளின் தங்க நிற நுதல் கண்களைக் கவரும்
பூவுலகின் மேல் இருக்கும் கலப்பற்ற தங்கம் தேவையெனில்,
நேர்த்தியான அவளின் தங்கக்குழல்கற்றைகள் சரிந்து விழும் அழகு
காணீர்!
வெள்ளி தேவையெனில் அவளின் வெளுத்த மினுமினுக்கும்
வாழைத்தண்டுக் கரங்கள் வெளியிடும் பளீர் ஒளியைக்கண்டு
களிக்கலாம்.
ஆயினும்,
அனைத்திலும் மேன்மையானது அனைவரும் அறிய இயலா,
எண்ணிறந்த இன்னலப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவள்
அகம்.
Amoretti and Epithalamion – Sonnet XV. Ye tradeful Merchants, that, with weary toil
Edmund Spenser (1552?–1599)
Ye tradefull Merchants that with weary toyle
By Edmund Spenser
Ye tradefull Merchants that with weary toyle,
Do seeke most pretious things to make your gain:
And both the Indias of their treasures spoile,
What needeth you to seeke so farre in vaine?
For loe my love doth in her selfe containe
All this worlds riches that may farre be found,
If Saphyres, loe hir eies be Saphyres plaine,
If Rubies, loe hir lips be Rubies sound:
If Pearles, hir teeth be pearles both pure and round;
If Yvorie, her forhead yvory weene;
If Gold, her locks are finest gold on ground;
If silver, her faire hands are silver sheene;
But that which fairest is, but few behold,
Her mind adornd with vertues manifold.
2.
சுறுசுறுப்புடன் சுழன்று திரியும்
முதிர்ந்த அறிவிலி கதிரவனே!
பலகணி இடுக்கினூடும் திரைசீலையில் ஊடுருவியும்
எங்களைக் காண நீ ஏன் முயல்கிறாய்?
உன்னைச் சுற்றியே காதலர்களின் காலநிலை
இயங்க அவசியம்தான் யாது?
துடுக்கான பகட்டு ஆதவனே! பள்ளி செல்லும் சிறார்களின்உ றக்கத்தை கலைத்து
தாமதம் தவிர்த்து, பணிபயில செல்வோருக்கு எரிச்சலூட்டிகடிந்து கொள்!
வேட்டைக்காரர்களுக்கு ராஜாவின் வேட்டையாடும் எண்ணத்தை தகவல் அளித்துக்கொள்!
துயில் கொண்டிருக்கும் எறும்புக்கூட்டத்தை
எழுப்பி அறுவடை நடந்த அறிவிப்பு வெளியிடு!
காலநிலை மாற்றம் அறியாது , நாள், கிழமை, மாதம்
புரியாது, தங்கள் மனதின் அவகாசம் ஒன்றே சிறப்பு என வாழும் காதலுக்கு நீ எதற்கு? உன் ஒளிகிரணங்களின்
தேவைதான் யாது?
An attempt to bring out the idea of the First Stanza of the poem ‘The Sun Rising’ by John Donne!
The Original stanza :
Busy old fool, unruly sun,
Why dost thou thus,
Through windows, and through curtains call on us?
Must to thy motions lovers’ seasons run?
Saucy pedantic wretch, go chide
Late school boys and sour prentices,
Go tell court huntsmen that the king will ride,
Call country ants to harvest offices,
Love, all alike, no season knows nor clime,
Nor hours, days, months, which are the rags of time.
3.
காதலானாலும், கடும் வெறுப்பானாலும் எனக்கு சாதகம்தான் சந்தேகமின்றி!
காதலில் கசிந்துருகினால் உன் மனம் முழுதும் நான்!
கடும் துவேஷம் கொண்டால், உன் மன எண்ணம் எனும் கிண்ணம் முழுதும் நிரம்பி வழியும் நான்!
தேர்ந்தெடுத்துக்கொள் நீயே!
– வில்லியம் ஷேக்ஸ்பியர் –
4.
வீழ்ந்தாலும் வாழும், வாழ வைக்கும் நீர்வீழ்ச்சி
வாழ்ந்து அற்பாயுளில் வீழ்ந்தாலும் மணம் பரப்பும் மலர்க்கூட்டம்
வாழ்வின் தாத்பரியமாய் தேன் அளிக்கும் தேனீக்கூட்டம்
வாழ்வின் ஆரம்பமாய் துளிர்க்கும் மரத்துளிர்கள்
வாழும்போதே வண்ணம் வாரி இறைக்கும் மீன்கொத்தி பறவைக்கூட்டம்
வாழும் உயிர்களை தன்னகத்தே கொண்டு மனிதர்களின் வாழ்வாதாரமாய் வாழும் கடல் அன்னை
வாழ்வின் உயிர்த்துளி வாரி வழங்கும் வான் கங்கை
வித்துக்களை தட்டி எழுப்பி வாழ்த்தி வாழவைக்கும் மண் மகள்
வாழ்வை வழங்க தென்றலாயும், அழித்தொழிக்க புயலாகவும் காற்றுக் கன்னி
வாழ்வற்று வதங்கி வீழும் வேண்டாமைகளை விழுங்கி கபளீகரம் செய்யும் அனல்கொழுந்து அன்னை
வாழ்வதே நம் தலையாய கடமை என அனுதினம் நமக்கு உணர்த்தும் சூரிய நாயகன்
வாழ்வின் மேன்மையை மென்மையாக பொழிந்து விளக்கும் வெண்ணிறக் கன்னி உதய நிலா
வாழ்வை, நம் வாழ்வை நாம் சரிபட வாழ நமக்கு வழிகாட்டும் வழித்துணைகள்
வாழியவே! வாழியவே!
5.
நானாய் நான் இருப்பதில் எந்த சிக்கலும் இல்லை
பல முகமூடிகளுக்குள் என்னை பிறர் திணிக்க எத்தனிக்கும்
காரியத்தில் தான்
மூச்சுத்திணறல் எனக்கு!
6.
வான் பொழியும் அமிழ்துண்டு
நிலமகள் துளிர்த்தாட
மாமழை போற்றுதும்!
மாமழை போற்றுதும்!
7
சிலிர்த்து சிலுப்புகிறாய்
சீற்றத்துடன் தூற்றலாய் நனைக்கிறாய்
சிணுங்கி சிணுங்கி வீழ்கிறாய்
சுழற்றி சுழற்றி வீசுகிறாய்
மரங்களின் தலை விரித்து பேய் ஒட்டுகிறாய்
கருப்பு கொடி காட்டினாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறாய்
வருவது போல் வாராமல் செல்கிறாய்
வந்ததும் பெரும் அழிச்சாட்டியம் செய்கிறாய்
சாலைகளில் சடசடத்துப் பெருகி சடுகுடு ஆடுகிறாய்
தன் இதழ் விரித்து மலரும் மலர்களை ஈரப்பதமாக்குகிறாய்
பாசம் எனும் வலையை மனித இனத்துக்கு தரையில்
படம் வரைந்து பாகம் குறித்து விளக்குகிறாய்
உன் மேன்மை உணரா மானுடம்
தலைக்கனத்துடன் வான் பார்த்து வீறு நடை போடும்
வேளையில் படாரென வழுக்கி வீழ்த்தி
படபடவென கைகொட்டிக் களிக்கிறாய்..
சிறார்கள் துள்ளிக்குதிக்க தார் சாலைகளில்
குட்டி குளம் சமைத்துக்கொடுக்கிறாய்
குபீர் என அவர்கள் குதிக்கையில்
சளீரென வெள்ளுடை வேந்தர்களை அலங்கோலம் செய்து
கலகலவென நகைக்கிறாய்
கடும்பசி கொண்டு கடலோடிகளை கபளீகரம் செய்கிறாய்
யாரென்று உன்னை இனம் காண்பது?
ஓ! மழை என்ற பெயரும் உண்டோ உனக்கு?
தெரியாதே எனக்கு!