கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020

நிகழ்வுகள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020

வணக்கம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவும், நூல் வெளியீடும் வருகின்ற ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11-04-2020) சனிக்கிழமை மாலை கனடா ஐயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் என்பதை அங்கத்தவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எழுத்தாளர் இணையத்தால் சர்வதேசரீதியாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற பதினாறு சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும், இந்த நிகழ்வின் போது எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களின் நூல்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

குரு அரவிந்தன் ( தலைவர்  )                  ஆர். என். லோகேந்திரலிங்கம் (  செயலாளர்)

kuruaravinthan@hotmail.com