பேசாமொழி 11வது இதழ் வெளிவந்துவிட்டது…

பேசாமொழி 11வது இதழ் வெளிவந்துவிட்டது...நண்பர்களே பேசாமொழி (http://pesaamoli.com/index_content_11.html) 11வது இதழ் இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழ், இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நல்ல சினிமா பற்றிய எழுத்தாளர்களின் மௌனம் குறித்த மருதுவின் கட்டுரையும், சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே திரைப்படம் குறித்த யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், எழுத்தாளர்களும், சினிமாவும் என்கிற தியடோர் பாஸ்கரனின் கட்டுரையும், சிறுகதைகளில் இருந்து குறும்படமாக்கப்பட்ட படங்கள் குறித்த தினேஷின் கட்டுரையும், ஏழை படும் பாடு படம் குறித்த பிச்சைக்காரனின் கட்டுரையும், பூ திரைப்படம் பற்றிய ரிஷான் ஷெரிபின் கட்டுரையும், சாஹித்ய அகடெமி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கு பற்றிய குமரகுருபரனின் கட்டுரையும் முக்கியமானது. தவிர ஷாட் பை ஷாட் மொழிபெயர்ப்பும் இந்த மாதம் வெளிவந்துள்ளது. தமிழில் நாவலில் இருந்து திரைப்படமாக்கப்பட்ட படங்களின் பட்டியலும், to-live படம் குறித்த கட்டுரையும் கூடுதல் கவனத்திற்குரியது. பேசாமொழி மாத இதழ் முழுக்க முழுக்க சினிமாவிற்கானது. எவ்வித கட்டணமும் இன்றி, இணையத்தில் இலவசமாக பேசாமொழி இதழை படிக்கலாம். நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள பல கட்டுரைகள் படிக்க கிடைக்கும். நண்பர்கள் அவசியம் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.    — thamizhstudio@gmail.com