வாசிப்பும், யோசிப்பும் 112: பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும், பிலோ இருதயநாத்: கானுயிர் பயணங்களின் முன்னோடியா? அல்லது மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியா? & முகநூலில் எல்லை மீறும் விவாதங்கள்… (மேலும் சில முகநூல் குறிப்புகள்)

பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும்

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இருவரையும் நான் ஒருமுறை நேரடியாகச்சந்தித்துள்ளேன். 80 /81 காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகைக்காக இருவரிடமும் ஆக்கங்கள் நாடிச்சந்தித்திருந்தேன். அப்பொழுது யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவரான நண்பர் ஆனந்தகுமார் என்னை அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்துச்சென்றார்.

கலாநிதி எங்களிருவரையும் அன்புடன் வரவேற்று வந்த காரணம் பற்றி வினவினார். நான் நுட்பம் இதழ் பற்றிக்குறிப்பிட்டு, அதற்கு அவரது கட்டுரையொன்றை நாடி வந்துள்ள விபரத்தை எடுத்துரைத்தேன். அவர் அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் தர ஒத்துக்கொண்டதுடன் , குறிப்பிட்ட திகதியொன்றைக்குறிப்பிட்டு அன்று வந்து கட்டுரையினைப்பெற்றுக்கொள்ளவுமென்றும் கூறினார். அதன் பிறகு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றோம். அவரும் எங்களிருவரையும் வரவேற்று, எங்கள் வருகைக்கான காரணத்தை அறிந்ததும் நுட்பம் சஞ்சிகைக்குக் குறிப்பிட்ட திகதியில் கட்டுரை தர ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட திகதியில் பேராசிரியர் க.கைலாசபதி ‘அபிவிருத்திக் கோட்பாடு – ஒரு கண்ணோட்டம்’ என்னும் தலைப்பில் நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையினை ‘நுட்பம்’ சஞ்சிகைக்காகத்தந்திருந்தார். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் குறிப்பிட்ட திகதியை ஞாபகம் வைத்துக் கட்டுரையினைத்தர முடியவில்லை. அத்துடன் பேராசிரியர் கைலாசபதி ‘நுட்பம்’ இதழ் வெளிவந்து அவரதுக்குக் கிடைத்ததும் மறக்காமல் சிறு விமர்சனக்குறிப்பொன்றினையும் அனுப்பியிருந்தார்.

எவ்வளவோ அலுவல்களுக்கு மத்தியிலும், இதழுக்குக் கேட்ட கட்டுரை பற்றி மறக்காமல், குறித்த திகதியில் கட்டுரையினைத் தயாராக வைத்திருந்த பேராசிரியர் கைலாசபதியின் அந்த ‘காலம் தவறாத பண்பு’ (punctuality) அவரைப்பற்றி எண்ணும் சமயங்களிலெல்லாம் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவதுண்டு.

அதன் பின்னர் அவரது திடீர் மறைவினையடுத்துக் கொழும்பில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருக்கின்றேன். (கதிரேசன் மண்டபத்தில் நடந்திருக்க வேண்டுமென்று நினைவு.)

இந்தச்சமயத்தில் நண்பர் ஆனந்தகுமாரைப்பற்றியும் குறிப்பிடத்தான் வேண்டும். அக்காலகட்டத்தில் பார்த்தால் மிகவும் அழகான தோற்றத்துடன், நடிகர் ஒருவரைப்போல் தோற்றமளிப்பார். என் பால்யகாலத்து முக்கியமான நண்பர்களில் இவருமொருவர். இவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் கொழும்பில் திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுதுதான் நான் இவரைக்கடைசியாகச் சந்தித்தது. 83 கலவரத்தைத்தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அவரும் 83ற்குப்பின்னர் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் தன்னைப்பிணைத்துக்கொண்டார். இந்திய அமைதி (?
smile emoticon
) காக்கும் படையினரின் காலகட்டத்தில் இரு வருடங்கள் பலாலியில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகளிலொருவரான கிட்டுவும் இவருடன் பலாலியில் சிறை வைக்கப்பட்டிருந்தாரென்று நினைக்கின்றேன்.

பின்னர் விடுதலைப்புலிகளின் தமீழீழப்பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக அறியப்பட்ட ‘ரூட்’ ரவிதான் அவர். மிகவும் அமைதியான சுபாவமுடைய இவர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் கொழும்பில் நடைபெற்ற புலிகளுக்கும், அரசுக்குமிடையிலான பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டதைப்பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். யாழ் இந்துக்கல்லூரி மாணவரான இவர் மிகவும் அமைதியான சுபாவம் மிக்கவர். பின்னர் விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக இயங்கியதை அறிந்தபொழுது ஆச்சரியப்பட்டேன்.

இவரைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகத்தில்வரும் இன்னுமொரு விடயம் இவரது அப்பாவின் இறந்த தினம். அப்பொழுது இவர் தனது குடும்பத்தவருடன் யாழ் அடைக்கலமாதா கோயிலருகில் வசித்து வந்தார். இவரது அப்பா இரத்மலானையில் உயர் அரச பதவியொன்றினை வகித்து வந்தார். இவரது மூத்த அண்ணனுக்குச் சிநேகிதர்கள் பலர். முஸ்லீம் சமூக நண்பர்களும் அவர்களில் பலர். இவருக்கும் பல நண்பர்கள். அடுத்த நாள் தகப்பனாரின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாள். முதல் நாளிரவு முழுவதும் நண்பர்கள் பலர் தேவையான உதவிகள் செய்துகொண்டிருந்தோம். இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாளன்று அனைவருக்கும் ஆச்சரியமொன்று காத்திருந்தது. இவரது தந்தையார் வேலை பார்க்கும் இடத்தில் பணி புரிந்த சிங்களவர்கள் மத்தியில் மிகுந்த அன்பினையும், மதிப்பினையும் பெற்றிருந்தார். அன்று காலை சுமார் 200 சிங்களவர்கள் வரை (எண்ணிக்கை சிறிது அதிகமாகவுமிருக்கலாம்) காலைப்புகைவண்டியில் மரண வீட்டுக்கு வந்திறங்கி விட்டார்கள். அன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு , சிறு கூட்டமொன்றினையும் வீட்டுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நடத்தி அவரைப்பற்றியும் நினைவு கூர்ந்து, பின்னர் வில்லூண்டி மயானத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு , பின்னர் மாலை புகைவண்டியில் இரத்மலானை திரும்பி விட்டார்கள். இவ்விதமானதொரு நிகழ்வினை நான் அதன் பின்னர் இலங்கையில் கண்டதேயில்லை.பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும்

இருவரையும் நான் ஒருமுறை நேரடியாகச்சந்தித்துள்ளேன். 80 /81 காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகைக்காக இருவரிடமும் ஆக்கங்கள் நாடிச்சந்தித்திருந்தேன். அப்பொழுது யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவரான நண்பர் ஆனந்தகுமார் என்னை அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்துச்சென்றார்.

கலாநிதி எங்களிருவரையும் அன்புடன் வரவேற்று வந்த காரணம் பற்றி வினவினார். நான் நுட்பம் இதழ் பற்றிக்குறிப்பிட்டு, அதற்கு அவரது கட்டுரையொன்றை நாடி வந்துள்ள விபரத்தை எடுத்துரைத்தேன். அவர் அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் தர ஒத்துக்கொண்டதுடன் , குறிப்பிட்ட திகதியொன்றைக்குறிப்பிட்டு அன்று வந்து கட்டுரையினைப்பெற்றுக்கொள்ளவுமென்றும் கூறினார். அதன் பிறகு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றோம். அவரும் எங்களிருவரையும் வரவேற்று, எங்கள் வருகைக்கான காரணத்தை அறிந்ததும் நுட்பம் சஞ்சிகைக்குக் குறிப்பிட்ட திகதியில் கட்டுரை தர ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட திகதியில் பேராசிரியர் க.கைலாசபதி ‘அபிவிருத்திக் கோட்பாடு – ஒரு கண்ணோட்டம்’ என்னும் தலைப்பில் நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையினை ‘நுட்பம்’ சஞ்சிகைக்காகத்தந்திருந்தார். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் குறிப்பிட்ட திகதியை ஞாபகம் வைத்துக் கட்டுரையினைத்தர முடியவில்லை. அத்துடன் பேராசிரியர் கைலாசபதி ‘நுட்பம்’ இதழ் வெளிவந்து அவரதுக்குக் கிடைத்ததும் மறக்காமல் சிறு விமர்சனக்குறிப்பொன்றினையும் அனுப்பியிருந்தார்.

எவ்வளவோ அலுவல்களுக்கு மத்தியிலும், இதழுக்குக் கேட்ட கட்டுரை பற்றி மறக்காமல், குறித்த திகதியில் கட்டுரையினைத் தயாராக வைத்திருந்த பேராசிரியர் கைலாசபதியின் அந்த ‘காலம் தவறாத பண்பு’ (punctuality) அவரைப்பற்றி எண்ணும் சமயங்களிலெல்லாம் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவதுண்டு.

அதன் பின்னர் அவரது திடீர் மறைவினையடுத்துக் கொழும்பில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருக்கின்றேன். (கதிரேசன் மண்டபத்தில் நடந்திருக்க வேண்டுமென்று நினைவு.)

இந்தச்சமயத்தில் நண்பர் ஆனந்தகுமாரைப்பற்றியும் குறிப்பிடத்தான் வேண்டும். அக்காலகட்டத்தில் பார்த்தால் மிகவும் அழகான தோற்றத்துடன், நடிகர் ஒருவரைப்போல் தோற்றமளிப்பார். என் பால்யகாலத்து முக்கியமான நண்பர்களில் இவருமொருவர். இவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் கொழும்பில் திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுதுதான் நான் இவரைக்கடைசியாகச் சந்தித்தது. 83 கலவரத்தைத்தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அவரும் 83ற்குப்பின்னர் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் தன்னைப்பிணைத்துக்கொண்டார். இந்திய அமைதி  காக்கும் படையினரின் காலகட்டத்தில் இரு வருடங்கள் பலாலியில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகளிலொருவரான கிட்டுவும் இவருடன் பலாலியில் சிறை வைக்கப்பட்டிருந்தாரென்று நினைக்கின்றேன்.

பின்னர் விடுதலைப்புலிகளின் தமீழீழப்பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக அறியப்பட்ட ‘ரூட்’ ரவிதான் அவர். மிகவும் அமைதியான சுபாவமுடைய இவர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் கொழும்பில் நடைபெற்ற புலிகளுக்கும், அரசுக்குமிடையிலான பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டதைப்பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். யாழ் இந்துக்கல்லூரி மாணவரான இவர் மிகவும் அமைதியான சுபாவம் மிக்கவர். பின்னர் விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக இயங்கியதை அறிந்தபொழுது ஆச்சரியப்பட்டேன்.

இவரைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகத்தில்வரும் இன்னுமொரு விடயம் இவரது அப்பாவின் இறந்த தினம். அப்பொழுது இவர் தனது குடும்பத்தவருடன் யாழ் அடைக்கலமாதா கோயிலருகில் வசித்து வந்தார். இவரது அப்பா இரத்மலானையில் உயர் அரச பதவியொன்றினை வகித்து வந்தார். இவரது மூத்த அண்ணனுக்குச் சிநேகிதர்கள் பலர். முஸ்லீம் சமூக நண்பர்களும் அவர்களில் பலர். இவருக்கும் பல நண்பர்கள். அடுத்த நாள் தகப்பனாரின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாள். முதல் நாளிரவு முழுவதும் நண்பர்கள் பலர் தேவையான உதவிகள் செய்துகொண்டிருந்தோம். இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாளன்று அனைவருக்கும் ஆச்சரியமொன்று காத்திருந்தது. இவரது தந்தையார் வேலை பார்க்கும் இடத்தில் பணி புரிந்த சிங்களவர்கள் மத்தியில் மிகுந்த அன்பினையும், மதிப்பினையும் பெற்றிருந்தார். அன்று காலை சுமார் 200 சிங்களவர்கள் வரை (எண்ணிக்கை சிறிது அதிகமாகவுமிருக்கலாம்) காலைப்புகைவண்டியில் மரண வீட்டுக்கு வந்திறங்கி விட்டார்கள். அன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு , சிறு கூட்டமொன்றினையும் வீட்டுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நடத்தி அவரைப்பற்றியும் நினைவு கூர்ந்து, பின்னர் வில்லூண்டி மயானத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு , பின்னர் மாலை புகைவண்டியில் இரத்மலானை திரும்பி விட்டார்கள். இவ்விதமானதொரு நிகழ்வினை நான் அதன் பின்னர் இலங்கையில் கண்டதேயில்லை.


பிலோ இருதயநாத்: கானுயிர் பயணங்களின் முன்னோடியா? அல்லது மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியா?

பிலோ இருதயநாத்என் மாணவப்பருவத்தில் எங்கள் வீட்டில் அப்பா வாங்கிக்குவித்திருந்த சஞ்சிகைகளில் மஞ்சரியும் ஒன்று. மஞ்சரியில்தான் முதன் முதலில் பிலோ இருதயநாத் அவர்களின் ஆதிவாசிகள் பற்றிய பயணக்கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். தனியொருவனாக அவர் இந்தியாவின் பல்வேறு பாகங்களூக்கும் பயணித்து, அங்கு வாழும் ஆதிக்குடிகள், காட்டுவாசிகள் எனப்பல பயணக்கட்டுரைகளைச்சுவைப்பட எழுதியிருக்கின்றார்.

இவர் பற்றிய பல விடயங்களை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைப்பதிவில் எழுதிய ‘பிலோ இருதயநாத்’ என்னும் கட்டுரையில் காணலாம். 1915இல் மைசூரில் பிறந்த இவர் சென்னை மந்தைவெளியிலுள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தாரென்றும், பள்ளி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவரென்றும் பல விடயங்களை ராமகிருஷ்ணனின் கட்டுரை எடுத்துரைக்கின்றது.

தமிழ்வாணனைப்போல், எம்ஜிஆரைப்பபோல் இவரும் ஆடை , அலங்காரங்களைப்பொறுத்தவரையில் தனித்துவம் பேணியவர். தொப்பி, கறுப்புக்கண்ணாடி அணிந்த தோற்றம், கூடவே பயணிக்க சைக்கிளொன்று… இவ்விதமானதோற்றத்தில்தான் அவரை அவர் பயணிக்கும் சமயங்களில் காண முடியும்.

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் இவரது பங்களிப்பு பற்றிக்குறிப்பிடுகையில் ‘மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி’யாகவும், ‘கானுயிர் பயணங்களின் முன்னோடியாகவும் குறிப்பிடுவார்.

நீலகிரிப்படகர்கள், ஊட்டி தோடர்கள், காடர்கள் எனப்பல்வேறு ஆதிக்குடிகள் பற்றி நான் முதலில் அறிந்துகொண்டது இவரது கட்டுரைகளின் மூலமாகத்தான். இவர் தனது பயணங்களின்போது சந்திக்கும் ஆதிவாசிகளுடன் தங்கியிருந்து, அவர்களது மொழிகளையும் கற்பதில் ஆர்வம் மிக்கவராகவிருந்திருக்கின்றார். அத்துடன் அவர்களது பழக்க வழக்கங்களையெல்லாம் அறிந்து அவற்றைசு சுவையாக , யாரும் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார்.

இவரது பேரன் எனத்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனோஜ்குமார் தனது வலைப்பதிவில் இவரை Dr.பிலோ இருதயநாத் என்று குறிப்பிடுவார். அதே சமயம் அவரைத் தனது தாத்தாவென்றும் அறிமுகப்படுத்துவார். மேலும் தனது பதிவில் பிலோ இருதயநாத் அவர்கள் 3000 கட்டுரைகள் வரை எழுதியிருப்பதாகவும் அவை 70 இதழ்களில் வெளிவந்திருப்பதாகவும், எழுதிய 63 நூல்களில் 37 மட்டுமே வெளியாகியிருப்பதாகவும் குறிப்பிடுவார். அத்துடன் இந்திய மத்திய அரசின் மற்றும் தமிழக அரசின் விருதுகளைப்பெற்றவரென்றும் குறிப்பிடுவார். இவரை ‘Dr.பிலோ இருதயநாத்’ என்று அவர் குறிப்பிடுவதிலிருக்கும் Dr எதைக்குறிக்கின்றது என்பது தெரியவில்லை. இவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியயென்பதால் மருத்துவரல்லர். ஏதாவது பல்கலைக்கழகம் இவரது சேவையினைப் பாராட்டிக்கொடுத்த கெளரவக் கலாநிதி பட்டமோ தெரியவில்லை. ஆனால் அவ்விதமானதொரு பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர்தான் பிலோ இருதயநாத் அவர்கள்.

அவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடமையாக்க வேண்டும். அதன் மூலம் அப்படைப்புகள் அனைத்தும் நூலுருப்பெறும் வாய்ப்பு கிட்டும்.

சைக்கிளில் எப்பொழுதுமே பயணிக்கும் இவர் அவ்வப்போது மரத்துடன் சைக்கிள் ‘கேரியரை’ சாய்த்து வைத்து, அதனையும் , மரத்தையும் பலகையினையுமிணைத்து தூங்குவாராம்.

எனக்கு அவரது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். அவர் ஞாபகமாக அவரை வெளிப்படுத்தும் புகைப்படங்கள், வானதி பதிப்பகம் மூலம்  வெளியான நூல்கள் சிலவற்றின் அட்டைப்படங்களை உள்ளடக்கிய புகைப்படம் ஆகியவற்றை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்


முகநூலில் எல்லை மீறும் விவாதங்கள்…

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்முகநூலின் முக்கியமான பயன்களிலொன்று நண்பர்களாக இணைவது. அவ்விதம் இணைந்துகொண்டபின் ஒருவருக்கொருவர் வாதங்களை முறைப்படி முன்னெடுக்காமல் முட்டி மோதிக்கொள்வது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. முகநூலின் ஆரோக்கியமான நோக்கங்களிலொன்றினைச்சிதைப்பதாகவும் அவ்விதமான மோதல்கள் அமைந்து விடுகின்றன.

விவாதங்களை ஆரோக்கியமாக, தர்க்கபூர்வமாகக்கொண்டு நடத்துவதற்குரிய ஆற்றலை வளர்த்தெடுப்பதற்குரிய பயிற்சிக்கூடமாக முகநூலைப்பயன்படுத்தலாமே. அவ்விதம் பயன்படுத்தாமல் முட்டி மோதுவதால் பயன் ஏதுமுண்டா?

உதாரணத்துக்கு அண்மையில் முகநூலில் முகநூல் நண்பர்களான அசோக் யோகன் கண்ணமுத்துவுக்கும், ‘கறுப்பி’ சுமதிக்குமிடையில் நடைபெற்ற விவாதத்தினைச்சிறிது பார்ப்போம்.

அசோக் சுமதி மீது பாரதூரமானதொரு குற்றச்சாட்டினை வைக்கின்றார். அது வருமாறு:  ” கனடாவில் நடந்த கூட்டம் ஒன்றில், இலங்கை பேரினவாத இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சனை எழுந்தபோது; சுமதி ரூபன் அவர்கள், இராணுவத்தின் பாலியல் தேவைகளையும் ,உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று பேசியது பற்றி நான் குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டதால், அந்த முகப் புத்தக உரையாடலில் அங்கு இதனை குறிப்பிட்டேன். சுமதி ரூபனின் இலங்கை இராணுவம் பற்றிய இக் கருத்து, பல இணைய வலைத்தளங்களிலும், முகப் புத்தக பக்கங்களிலும் கண்டனத்திற்கும் சச்சைகளுக்கும் உரியதாக அமைந்திருந்தது.கனடா நண்பர்கள் ஊடாகவும் இதனை நான் கேள்வியுற்று இருந்தேன்.இதன் அடிப்படையிலேயே சுமதி ரூபனின் அக் கருத்தை பதிவிட்டேன்.”

இது மிகவும் பாரதூரமானதொரு குற்றச்சாட்டு. இதனைச் சுமதி மறுத்திருப்பதாக அசோக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலாக அவர் பின்வருமாறு கூறுகின்றார்: ” உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின் நம் வாக்கினில் ஒளி உண்டாகும்”.இது உங்களுக்குப் பொருந்துமா; எனக்குப் பொருத்துமா என்பதை எமது சமூக வாழ்வுதான் சாட்சியம்.நீங்கள் அவ்வாறு கதைக்கவில்லையெனில் நான் எழுதிய இக் கூற்றுக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.நன்றி”

இதற்குச் சுமதி பின்வருமாறு பதிலிறுத்ததாக அசோக் தனது பதிவில் கூறுகின்றார். அது: “அசோக் எனும் ஒருவர் முகப்புத்தகத்தில் வந்து பெண்களை மிகவும் மோசமாக எழுதிக்கொண்டிருக்கின்றார். பிரான்சில் இருந்து கொண்டு கனடாவிலிருக்கும் பெண்கள் பற்றித் தனக்குத் தெரிந்தாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கின்றார். யார் சொன்னார்கள் என்று கேட்டால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று விட்டுப் பின்னர் மன்னிப்பும் கேட்கின்றார். தனது காழ்வுப்புணர்வு மனப்பான்மையால் இயங்கிக் கொண்டு பெண்களை வம்புக்கிழுத்து கேவலப்படும் இந்த அசோக்கின் மனநிலையை நான் கண்டிக்கின்றேன்:”

இதற்குப்பதிலாக அசோக் ” நண்பர்களே! தயவு செய்து சுமதி ரூபன் அவர்கள் என்னைப் பற்றி எழுதியுள்ள “வியாக்கியானங்களை” மீண்டும் படித்துப்பாருங்கள். அதனுள் புதைந்திருக்கும் வஞ்சகத்தனமும், குரூரமும் உங்களுக்கு வெளிப்படும். பெரும் தன்மையோடு மன்னிப்புகோரிய ஒரு செயலை எவ்வாறு திட்டமிட்டு திரிக்கிறார் என்பதை நினைக்கும்போது கவலையும் வேதனையுமே எழுகின்றது.” என்று எழுதியிருக்கின்றார்.

இவ்விவாதத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் உணர்ச்சியின் அடிப்படையில் ஆரோக்கியமாக நடைபெற்றிருக்க வேண்டிய விவாதத்தைச்சீர்குலைத்து விட்டிருக்கின்றார்களென்றே எனக்குத்தோன்றுகின்றது.

இவ்விவாதம் எல்லை மீறாமல் முடிந்திருக்கும் கீழுள்ளவாறு நடைபெற்றிருந்தால்..:

அசோக் தான் சுமதி கூறியதாக வெளியான முகநூல் பக்கங்களின் பெயர்களை, இணையத்தளங்களின் விபரங்களை, கூறிய கனடா நண்பர்களின் விபரங்களைப் பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் ஒருவர் மீது பாரதூரமானதொரு குற்றச்சாட்டினை முகநூல்போன்ற பொது வெளியொன்றில் முன் வைக்கும்போது அவற்றுக்கான ஆதாரங்களைப் பகிரங்கமாக முன் வைக்க வேண்டும். அவ்விதம் வைக்க விரும்பாவிட்டால் அசோக் சுமதிக்குத் தனிப்பட்டரீதியில் ‘இவ்விதம் நான் கேள்விப்படுகின்றேன். உண்மையா ” என்று கேட்டிருக்க வேண்டும்.

அவ்விதம் ஆதாரங்களை முன் வைத்திருந்தால் சுமதி அவர்கள் அவ்வாதாரங்களுக்குப் பதிலிறுக்க வேண்டி வந்திருக்கும். அல்லது அவை பொய்யாகவிருப்பின் அவற்றைக் கூறியவர்களிடம் நியாயம் கேட்டிருக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அசோக் அவ்விதம் பகிரங்கப்படுத்தியிருந்தால் சுமதி அசோக்கின் மீது உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

மேலும் ஆதாரங்கள் இருக்கும்போது எதற்காக அவை பொய்யாக இருந்தால் மன்னிப்புக் கேட்கின்றேன் என்று அசோக் கேட்க வேண்டும்?

அசோக் மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. ஏனென்றால் அவ்விதம் கூறிய இணையத்தளங்கள், கனடிய நண்பர்கள், முகநூல் பக்க உரிமையாளர்கள்தாம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

அசோக் மிகவும் இலகுவாக இந்தப்பிரச்சினையை சுமதிக்கும், அவரைப்பற்றி இவ்விதமான தகவல்களைக் கூறியவர்களுக்குமிடையில் விட்டு விட்டு விலகியிருக்க முடியும் ஆதாரங்களைப்பகிரங்கப்படுத்தியிருந்தால். அவ்விதம் ஆதாரங்களை வெளிப்படுத்தாத காரணத்தால் சுமதி அவரைக்குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் தேவையற்ற மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் நிலையிலிருந்து இருவரும் மீண்டு வந்து , மீண்டும் நண்பர்களாக அசோக் ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். பொதுவெளியில் வெளிப்படுத்தத்தேவையில்லை. சுமதிக்குத் தனிப்பட்டரீதியில் அறிவிக்கலாம். அவ்விதம் அறிவித்துவிட்டு தான் அறிவித்த விடயத்தை முகநூலில் வெளிப்படுத்திவிட்டு தொடர்ந்து மீண்டும் இருவரும் நட்பாகவே இருந்துவிடலாம்.


கானா பாட்டு பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சங்கச்சித்திரங்கள்’ நூலிலுள்ள பதினாறாவது கட்டுரையான திணை: கனகாம்பரம் கட்டுரையில் அவர் கானா பாட்டு பற்றி எழுதியிருந்ததை இங்கு பகிரிந்துகொள்கின்றேன். கானா பற்றி உங்களுக்கும் ஏதாவது கருத்துகளிருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து (பக்கங்கள் 111 & 112)…….

“சென்னையில் துறைமுகத்தை ஒட்டிய குடிசைப்பகுதிகளில் பிறந்து வளர்ந்த இப்பாடல் வடிவத்தில் தெம்மாங்குக்கு நெருக்கமானது. ‘கானா’ என்றால் என்ன பொருள்?’ என்று ஒருத்தரிடம் கேட்டேன். இந்தியில் ‘சாப்பாடு’ என்று பொருள் வரும் பிராந்தியச்சொல் அது. கூலி வேலைக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய மக்கள் மதிய உணவு நேரத்தில் பாட ஆரம்பித்த பாடல் என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றார். பெரும்பாலும் அலுமினுய உணவுப்பாத்திரமே வாத்தியம். கானா என்றாலே பாடல் என்றுதான் பொருள் என்றார் ஒருவர்.

கானாவுக்கு ஒரு வரி வடிவம் உருவாகியுள்ளது. அது அப்பாடலின் பொதுவான தாளத்தில் இருந்து உருவானது. அந்தத்தாளம் அதன் வாத்தியத்தை அடிப்படையாகக்கொண்டு பிறந்தது. இறுதிச்சொல் ஒன்றுபோல் ஒலிக்கும் ரஒம் போன்ற வடிவம் அதற்கு உருவாகியுள்ளது வியப்புக்குரியதுதான்.

மூணாம் தெரு முனிமா கடை பன்னு
கடனைச் சொல்லி வாங்கிவந்து தின்னு
காசில்லாம மாவாட்டறாண்டா மைனரு
முனிமாதான் படா பேஜார் ஓனரு.

இது கானா பாடலின் எடுப்பு. பிறகு மெதுவாகத்தாளம் வேகமாகிறது. குரல் உச்சத்துக்குப்போய் கீச்சிட்டு ஒலிக்க முடிப்பு.

வாடா தம்பி! தங்கக் கம்பி!
எடுடா குச்சி! அடிடா மச்சி!
டண்டணாக்கா தாளம்
தமுக்கடிக்கிற மோளம்..

கானாப்பாடலில் பெரும்பாலும் காதல், தொழில், கஷ்ட்டங்கள், குடும்பப்பிரச்சினைகள், வறுமை,சமூக ஏற்றத்தாழ்வு முதலியவை விஷயமாகின்றன. மதுக்கடை, சாலை, திரை அரங்கு போன்றவை நிகழ்விடங்கள். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ போன்றவை வாகனங்கள். குடிசைவாழ் மக்கள்தான் கதை மாந்தர்.

கானா பாடலில் இயற்கை இல்லை. மழை உண்டு. சுரங்க நடைபாதையில் குடும்பத்துடன் ஒண்டிக்கொள்கிறவனின் துக்கமாக, வெயில் உண்டு உருகும் தார்ச்சாலையில் தள்ளுவண்டி இழுப்பவனின் வியர்வையாக. ஆனால் மனித துக்கம் உருத்திரளும் கவித்துவக் கணங்கள் உண்டு.

 

ngiri2704@rogers.com