வாழ்வு பூத்துக் குலுங்கும்
பூஞ்சோலையாய் மணம்
வீச வேண்டுமா?
பூரிப்புடன் வாழ்வில்
நடை பயில வேண்டுமா?
அறிவு தந்து
உலகை காட்டிய ஆத்மாவை
அடி தொட்டு பாதம் வணங்குவோம்
ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.
அறிவின் முதிர்ச்சிவே வாழ்வின் வளர்ச்சி
ஆய்ந்தால் பெருவாழ்வு இவை
அனைத்தும் தந்த ஆசிரியர்
வாழும் வரை வணங்கிடு, மறந்தால்
அடுத்தப் பிறவி பாவப் பிறவிதான்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
குருவின் சொல் அதற்கும் மேல
குரு கடவுளின் அவதாரம்
வேண்டுமளவு பெற்றுக் கொள்
நன்றியுடன் குருவை வணங்குதல்
எடுத்த பிறப்புக்குப் பொருண்டு.
நானிலம் போற்றும் நல்லாசிரியர்
நாட்டுக்குழைப்பவர் என்னாலும்
நற்குடிகளைத் நாளும் தருபவர்
மாதா,பிதா,குரு,தெய்வம்
தவறாமல் வணங்குதல்
நமது கடன்களென்போம்
மறுத்தல் பாவத்தின் உச்சமென்றோ!
புனிதமான ஆசிரியர் தினத்தில்
கல்வி தந்த தெய்வங்களை
நாட்டுக்கே தலையென்றாலும்
மறுக்காமல்
தலை வணங்கிப் பாதம் தொட்டு
நன்னாளில் வணங்குதலும்
வளமுடன் வாழ்தலும்
மனித நியதியன்றோ?
சான்றோரை மதித்தலும்
அவர் சொற்படி நடத்தலும்
அமைதி உலகில் பிறக்குமன்றோ
அறிவுக்கு தலை வணங்குவோம்
அறிஞர்களாய்ப் பிறப்பெடுப்போம்
ஆசியரின் பெயர் சிறக்க வைப்போம்.
அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
arunveloo03@gmail.com