எழுத்தாளர் பற்றி எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் தனது முகநூற் பதிவொன்றில் “கதை. கவிதை, கட்டுரை எழுதுபவர்களையே “எழுத்தாளர்” எனக் கொள்லாமென நம்பியிருந்தேன். அண்மைகாலங்களில் கட்டுரை எழுதுபவர்களுயும் எழுத்தாளர் எனக் கொள்ளலாமென ஒரு கருத்து மேலோங்கி இருக்கிறது என்னால் இதுபற்றி தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.” என்றொரு வினாவினை எழுப்பியிருந்தார். அது பற்றிய எனது சிந்தனை கீழே.
எழுத்தாளன் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன. எழுத்தை ஆள்பவர் என்பது ஓர் அர்த்தம். ஆனால் எழுத்தாளன் என்னும் சொல் உருவானது அந்த அர்த்தத்தில் மட்டுமல்ல. ஆளன் என்பது விகுதி. அந்த விகுதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சொல்தான் எழுத்தாளன் என்பதுவும். அந்த அர்த்தத்தில் இங்கு எழுத்து என்பதுடன் ஆளன் என்னும் விகுதியைச்சேர்த்து உருவாக்கப்பட்ட சொல்லாக எழுத்தாளன் வருகின்றது. உதாரணமாக பேச்சு + ஆளன் = பேச்சாளன். எனவே கட்டுரை மட்டுமல்ல எழுத்தின் எந்த வடிவத்தினையும் கையாள்பவனை எழுத்தாளன் என்றும், பொதுவாக எழுத்தாளர் என்று அழைப்பதில் எந்த விதத்தவறுமில்லை.
Rajaji Rajagopalan ஆளன் என்னும் விகுதிக்கு நீங்கள் தந்த விளக்கம் அர்த்தமுள்ளது. எழுதும் எல்லாரும் எழுத்தையே தமது சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் ஆயுதமாகக் கொள்கிறார்கள்.
Sri Sritharan ஆங்கிலத்தில் writer, author என இரண்டு வெவ்வேறு சொற்கள் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Author
Jeeva Kumaran எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் புனைவு இலக்கியம் (FICTION: சிறறுதை-கதை-நாவல்-கவிதை-நாடகம்) போன்ற இலக்கிய வடிவங்களைப் படைத்தவர்களை ஆக்க (CREATIVE WRITERS) எழுத்தாளர்கள் என்றும்…. மற்றைய வகை நூல்களை எழுதியவர்களை நூலாசிரியர் என்றும் அழைத்ததாக ஞாபகம்.
F.ex: Writer Mr. Jeyakanthan: Authour Mr. Sivathamby
ஆனால் பத்தி எழுத்துகளும்… புனைவு இலக்கிய ஆசிரியர்களே பத்தி எழுத்துக்குள் வந்ததும் அவர்களை அங்கே வேறுபடுத்தாது அதே எழுத்தாளர்கள் தலையங்கத்துடன் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இன்று எழுதுபவன் எல்லாம் எழுத்தாளராயும் கவிஞனும் என்றாகி விட்டது என்று நினைக்கின்றேன் Adhavan Cathiresarpillai ஒரு சின்ன லொஜிக். கலைஞர்கள் எல்லாரும் மனிதர்கள். மனிதர்கள் எல்லாரும் கலைஞரா….?
Giritharan Navaratnam நண்பருக்கு இன்னுமொரு சின்ன லொஜிக். எழுத்தாளர்கள் எல்லாரும் மனிதர்கள். மனிதர்கள் எல்லாரும் எழுத்தாளர்களா?
Kuppilan Shanmugan தமிழ் இலக்கணப்படி ஆளன் என்றோர் விகுதி இல்லை எழுத்தாளன் என்பது எழுத்து+ஆள்+அன் எனவேவரும். ஆள் என்பது ஆள்தல் என்ற பொருளில் வருமென நினைக்கிறேன் என்வே எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன் என்றாகிறது. நண்பர்களுக்கு நன்றிகள்.
Giritharan Navaratnam தமிழில் ஆளன் என்று தனியாக ஒரு விகுதி இல்லை. ஆனால் ஆள், அன் என்று விகுதிகளுள்ளன. உதாரணமாக இரப்பாளன் என்னும் சொல்லைப்பற்றிய விக்சனரி உதாரணத்தைச்சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதற்குரிய விளக்கமாக விக்சனரியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“இரப்பு + ஆள் (அன்) = இரப்பாளன்….எவ்வித வேலையும் செய்யாமல், வேலை செய்வதால் கிடைக்கப்பெறும் வருமானம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பணம், உணவு, பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்ப பிறரிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையை ஓட்டும் மனிதனை இரப்பாளன் என்பர்”
[ https://ta.wiktionary.org/…/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AA… ]
இங்கு ஆள், அன் விகுதிகள் இரண்டினையும் உள்வாங்கி இரப்பாளன் என்று சொல்லினை உருவாக்கியிருப்பதை அவதானிக்கலாம். இங்கு ஆள் என்பது விகுதியாகத்தான் இருக்கின்றது. ஆள் என்பது ஆளுதல் என்னும் அர்த்தத்தில் வரவில்லை. மேலும் இங்கு ஆள் என்பதுடன் அன் என்னும் விகுதியையும் சேர்த்திருப்பதற்குக் காரணமாக நான் கருதுவது: ஆள் என்பது பெண்பாலைக்குறிப்பதற்காகப் பாவிக்கப்படும் விகுதி. இங்கு இரக்கும் ஆண் மனிதனைக்குறிப்பதற்கு அன் என்பதையும் சேர்த்து இரப்பாளன் என்று சொல்லினை உருவாக்கியிருக்கின்றார்கள். புதியதொரு தமிழ்ச்சொல்லினை உருவாக்கும்போது இவ்விதம் விகுதிகளை உள்வாங்கி உருவாக்குதல் பொதுவானதே. உதாரணமாகத் தமிழில் immigrant என்னும் சொல்லைக் குடிவரவாளன் என்று அழைப்பது வழக்கம். இங்குள்ள ஆள் ஆள்பவர் என்னும் அர்த்தத்தில் வரவில்லை. ஆள், அன் என்னும் விகுதிகள் இணைந்த ஆளன் என்னும் விகுதியைக்கொண்டே அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன். இங்கு நான் ஆளன் ஒரு விகுதி என்று கூறுவதற்கு ஒரு காரணமுண்டு. ஆள், அன் என்னும் இரு விகுதிகளை இணைத்துப்பாவிக்கும் சொல்லான ஆளன் என்பதும் விகுதியாகவே பாவிக்கப்படுகின்றது என்பதற்காகவே. அல்லாவிடில் அது ஆளுதல் என்னும் சொல்லையும் , அன் என்னும் விகுதியையும் கொண்டதாக அமைந்து விடும். அந்த அர்த்தம் இங்கு வரக்கூடாதென்பதற்காகவே குடிவரவாளன் என்னும் சொல்லில் உள்ள ஆளன் என்பது ஆள்+அன் என்னும் விகுதிகள் இணைந்த ஆளன் என்னும் சொல் என்பதைக்குறிப்பதற்காகவே ஆளன் என்பதையும் விகுதியாக நான் கருதுகின்றேன்.
Giritharan Navaratnam ஆளன் என்பதை ஆண் பாலீறுகளாகக்குறிப்பிடுவார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்! இணையத்தில் தேடியபோது மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் ஒப்பியன் மொழிநூலினை கீழுள்ள இணையத்தள முகவரியில் காண முடிந்தது. பதிப்பாசிரியர் -புலவர் அ.நக்கீரன். http://218.248.16.23/library/lA46A/html/lA46Aind.htm
இந்நூலின் நூல் 2இல், 127ஆம் பக்கத்தில் ஆண்பாலீறுகளிலொன்றாக ஆளன் என்பதையும் அவர் குறிப்பிடுவார்: ஆண்பாலீறுகள் அவன், அன், ஆன், ஓன், ன், மகன் – மான் – மன், வன், ஆளன், காரன் முதலியன. கா : வில்லவன், இடையன், தட்டான், மறையோன், கோன், திருமகன்-திருமான் (ஸ்ரீமான்), களமன், மணாளன், வேலைக்காரன். பெண்பாலீறுகள் அவள், அள், ஆள், ஓள், ஐ, மகள் – மாள், மி, வி, மாட்டி, ஆட்டி, அத்தை, அத்தி, அச்சி, காரி முதலியன. இவற்றுள் ஈற்றயல் மூன்றும் முறைப் பெயர்கள். http://218.248.16.23/slet/lA100/lA100pd2.jsp?bookid=249…
Giritharan Navaratnam மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் நூலின் வாயிலாக ஆண்பால் விகுதிகளிலொன்றாக ஆளன் என்னும் விகுதியும் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. நான் ஆள், அன் விகுதிகள் இணைந்து ஆளன் பாவிக்கப்பட்டதாக இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் தேவநேயப்பாவாணரின் கூற்றுப்படி ஆளன் என்னும் ஆண்பாலீறு இருந்துள்ளதை அறிய முடிகின்றது. ஆக எழுத்தாளன், பேச்சாளன் போன்றவற்றில் பாவிக்கப்படும் ஆளன் என்பதும் ஆளன் என்னும் விகுதியாக அல்லது ஆள், அன் ஆகிய விகுதிகளை இணைத்து உருவாக்கிய ஆளன் என்னும் விகுதியாகக்கொள்வதெ மிகவும் பொருத்தமாகத்தெரிகிறது
ngiri2704@rogers. com