தினமலர் இணையத்தளத்திலிருந்து …
சென்னை: தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். இதுவரை முன்னணி நிலவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும்.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கேரளாவில் .காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.
நன்றி: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=239292
பி.பி.ஸி. இணையத்தளத்திலிருந்து…
தமிழக தேர்தல்: அதிமுக பெரும் முன்னிலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரத்துவங்கியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி சுமார் 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில், திமுக மட்டும் 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, மைதீன்கான், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு உள்பட பலர் பின்தங்கியிருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனும் பின்தங்கியிருக்கிறார். அதே நேரத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி, திருவாரூர் தொகுதியிலும், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் பின்தங்கியிருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, அதிமுக கூட்டணி முன்னிலையில் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி, அதிமுக தனியாக ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், அதிமுக தனியாக சுமர் 137 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற, 117 தொகுதிகள் தேவை. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஷ்ரீரங்கம் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடன், சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
கேரளம்
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி முன்னணியும் நெருக்கமான போட்டியில் உள்ளன. ஐக்கிய ஜனநாயக முன்னணி 62 தொகுதிகளிலும், இடதுசாரி முன்னணி 62 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
அஸ்ஸாம்
அஸ்ஸாம் மாநிலத்தில் தருண்கோகாய் தலைமையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 79 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அஸாம் கனபரிஷத் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
நன்றி: http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110513_electionresults.shtml