குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நாவலுக்குக் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது!

குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது!நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தகவல்: punarthan@yahoo.com