ஞானம் 175ஆவது இதழ்: புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களே!  வணக்கம். அனைவருக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! ஞானம் 150ஆவது இதழை நாம் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிக்கொணர்ந்தோம்.  தற்போது 175 ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவருகிறது.. இந்த இதழின் பிரதிகளைப் பெறுவதற்கான விபரங்களைப் பின்னர் அறியத்தருவோம். எமது இலக்கியப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எமக்கு தோள்தந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். நீங்கள் இல்லாது எமது இலக்கியப்பணி நிறைவு கொள்வதில்லை. அதனை நாம் என்றும் மறவோம். இந்தச் சிறப்பிதழை தமிழன்னையின் பாதங்களில் சமர்ப்பிக்கும் இவ்வேளையில் எமது இதயங்கலந்த நன்றியை உங்கள் யாபேருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி, தி. ஞானசேகரன் (ஞானம் பிரதம ஆசிரியர்)

editor@gnanam.info