மரணம் இழப்பு மலர்தல் – நூல் வெளியீடும் அழைப்பிதழும்! மே 19, 2013; மாலை 5.00 மணி @ 2467 Eglinton Avenue East, Toronto, Canada.

நூல் வெளியீடும் கருத்துரைகளும்: 'மரணம் இழப்பு மலர்தல்'

போரினாலும் இன அழிப்பினாலும் மரணித்த மனிதர்களை நினைவு கூறவும், சமூக விடுதலைக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும், ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடி மரணித்தவர்களை நினைவு கூறவும், அனைவருக்கும் அஞ்சலி செய்வதற்கும், அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தவும், இழந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் இவர்கள் வாழ்வை மேப்படுத்தவும், நடைபெறும் நிகழ்வு இது. இதில் பல்துறைசார்ந்தோர் பலர் உரையாற்றவுள்ளனர்.

ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு; Mid Scarborough Community Centre, (2467 Eglinton Ave East).   நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். – வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு – வருகின்றவர்களுக்கு மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5.00 மணி.

இந்த அழைப்பிதழை இலங்கை, தமிழகம், மற்றும் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தேசங்களில் இருக்கின்ற நண்பர்களுக்கு அனுப்புகின்றேன். மரணம் இழப்பு மலர்தல் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் இதனை வெளியீடு செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். இதற்காகவே ரொரன்டோ தவிர்ந்த பிற நாடுகளிலுள்ளவர்களுக்கும் அனுப்பப்படுகின்றது. புரிந்துணர்வுக்கு நன்றி.