அப்போ அறிவெனப்படுவது யாது? அதாவது உறுதியான அறிவெனப்படுவது என்ன என்ற கேள்வி அன்றே எழுந்தது.
வரைவிலக்கணம் சொல்வது பற்றிப் பலர் பேசிக் கொண்டனர் பின்னாளில்.-வரைவிலணக்கம்- இதற்கென்ன வரைவிலக்கணம் என்று கேட்டார்கள்.
வரைவிலக்கணம் கூறுவது என்பது……. ஒன்றைச் சுட்டி, இதுவே இதுவென்றும்..இதுவல்லாவிடில் அது என்றும் அதுவல்லாவிடில் இது என்றும் சொல்லப்பட்டது.
-ஒன்றின் பொதுவான இயல்புகளையும் சிறப்பான இயல்புகளையும் சொல்லுதல்- என்பது வரைவிலக்கணமாகும். என்றும் சொல்லப்பட்டது.
மெய்யியல் என்றால் என்ன என்பதற்கு இன்றுவரை வரைவிலக்கணம் இல்லை. தத்துவம் என்றால் சொல்பவனுக்கும் விளங்காமளல், கேட்பவனுக்கும் விளங்காமல் இருக்கும் ஒரு உரைநடை. என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது. அப்போ என்ன செய்யலாம் ? இது என்ன ?
மெய்யியலாளர் என அறியப்பட்டோரிடம் போகலாம்.
1. ஃபைதோகிரஸ் சொல்கிறார்
-மெய்யியலாளர்கள் உலகின் பார்வையாளர்கள். அவர்கள் பங்காளிகள் அல்ல ஆனால் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை உதாரணமாகச் சொன்னார். அது மிகப் பிரபல்யம். அவர் சொன்னார்…ஒரு பெரிய ஸ்ரேடியம் அங்கே போட்டி நடைபெறுகிறது. விளையாடுபவர்களின் நோக்கம் தாங்கள் வெல்லவேண்டும் என்பது. இல்லாவிடில் அவர்கள் விளையாட வந்திருக்க மாட்டார்கள். அது போட்டியும் அல்ல. போட்டிக்கு ஒரு நடுவர் இருப்பார். அவர் இருந்தேயாகவேண்டும். இல்லையேல் யார் வென்றார்கள் என எவ்வாறு தீர்மானிக்க முடியும்?சரி, பார்வையாளருக்கு ஒரு த்றில். யார் வெல்வார்கள் என்று. ஆகவே பார்வையாளர்கள் கூடுகின்றனர். அங்கே பார்வையாளருக்கு ஐஸ்கிறீம் விற்க ஒரு சிறுவன் வருகிறான். அவனது நோக்கம் விற்பனை மட்டுமே. அவனுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பே இல்லை. இந்த விளையாட்டுத் திடலைக் கட்டியவனின் நோக்கம் என்ன? கட்டிடம் உறுதியாய் இருக்கவேண்டும் என்பது. விளையாட்டெல்லாம் முடிந்தபின்னர் குப்பைகளைப் பொறுக்கவெனச் சிலர் வருவார்கள். அவர்களுக்கும் விளையாட்டிற்கும் தொடர்பேயில்லை. இப்படியே பலரை ஒரு ஒலிம்பிக் திடலில் காணலாம்.
இவை எல்லாவற்றையுமே அவதானிக்கவும் பார்க்கவும் எந்த நோக்கமுமில்லாமல் ஒருவன் வருகிறான். அவனே மெய்யியலாளன் தத்துவவியலாளன் என்கிறார்…..
. ஃபைதோகிரஸ்! ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை செம்பக்கத்தின் வர்க்கத்திற்குச் சமனாகும்-
என்ற தேற்றத்தை உலகிற்குச் சொன்னவர்.
(தொடரும்)