கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது ஆண்டு மலர்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது ஆண்டு மலர்அன்புடையீர், எமது இணையம், அடுத்த ஆண்டு தனது 20 வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் நினைவாக, மலர் ஒன்றை வெளியிட நாம் முடிவு செய்துள்ளோம். அதற்காக உங்களிடமிருந்து தகுதியான ஆக்கங்களை, கட்டுரையாகவோ, கவிதையாகவோ, சிறுகதையாகவோ எதிர்பார்க்கின்றோம். தயவுசெய்து அவற்றை canadatamilwriters@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு நவம்பர் மாதம் 30 ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு உங்களை அன்புடன் கேட்கின்றோம். அத்துடன் நவம்பர் மாதம் முதல் எழுத்துப் பட்டறை ஒன்றை நடாத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கும் உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
செயலாளர்,
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்