கரிகாலன் விருது (2010/2011) பெறும் சிங்கை எழுத்தாளர்கள்!

2010/2011ஆம் ஆண்டுகளுக்கான சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும்,  திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது.

2010/2011ஆம் ஆண்டுகளுக்கான சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும்,  திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது,  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்துடன் இணைந்து, தமிழவேள் கோ. சாரங்கபாணி சார்பாக ஆண்டுதோறும் இந்த் வழங்கினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள். விருது பெற்றவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.

மூலம்: http://tamilmurasu.com.sg/story/17177