6 அக்டோபர், 2011 – தொழில்நுட்ப முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்
உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் , காலமானர். நீண்ட காலமாக , புற்று நோயால் அவதிப்பட்டுவந்த, ஜாப்ஸ், நேற்று இரவு காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 56. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஆகஸ்டு மாதம்தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.
நினைவுகளின் சுவட்டில் .. 76
மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனம் என்று தான் சொல்லவேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்றுகொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத்திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோவித்துக்கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆர்ம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.