[இக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இதழில் பிரசுரமானது. தற்போது ஒருங்குறியில் பதிவுசெய்வதன் அவசியம் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இது போல் ஜெயபாரதன் அவர்களின் ஏனைய கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப்படும். இது போல் ஏனையவர்களின் ஆக்கங்களும் படிப்படியாகப் பதிவுகளில் மீள்பிரசுரமாகும் — பதிவுகள்] விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன!இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பௌதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின. அணுவின் அமைப்பு, அண்ட வெளி காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ·பாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன. அப்போது உதித்ததுதான் ஐன்ஸ்டைன் படைத்த “ஒப்பியல் நியதி” [Theory of Relativity]. அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதி! புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! பலருக்குப் புரிய வில்லை! பலர் எதிர்த்து வாதாடினர்! மானிட சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, இவ்வரிய “ஒப்பியல் நியதி”. பல நூற்றாண்டுகளாய் பரந்த விஞ்ஞான மாளிகை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ·பாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில வேதத்தை ஆக்கம் செய்தார்.
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான ‘வைகறை’ மற்றும் வெளிவரும் ‘சுதந்திரன்’, ஈழநாடு’ ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. – ஆசிரியர், பதிவுகள்]