தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ இஅதிமுக பத்து மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 287 பேரூராட்சிகளையும் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. திமுகசென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராகப் பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த மா சுப்பிரமணியன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ இஅதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, திமுக, அதிமுக அதேபோல திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அ இஅதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
[அக்டோப்ர் 22, 2011] இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று சனிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்புடைய விடயங்கள்திமுக பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதல், திமுக எம்.பி. கனிமொழி வரை 17 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரிமினல் சதித்திட்டம், நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுதவிர, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 409-ன்படி, கிரிமினல் நம்பிக்கை மோசடிப் பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.