திடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு. வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையும் தம்பிகளையும் தூக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையும் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவு வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒன்று அசைவது போல… ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.
திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.
இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை குறித்த கருத்துப்பரிமாற்றத்திற்கான சந்திப்பு ஒன்றை பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (CDS – Comité de Defense Social -France) அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் இணைந்து சனிக் கிழமை 22.10.2011 பாரிசில் ஒழுங்கமைத்திருந்தன . இதில் கலந்துகொள்ள பிரான்சில் இருக்கும் பல்லின இடதுசாரி செயல்பாட்டு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். “திட்டமிட்ட இனப்படுகொலை” என்ற எல்லைவரை சென்றிருக்கும் இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை தொடர்பாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.