சிறுகதைப்போட்டி: தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், நூற்றாண்டு விழாவையொட்டிய சிறுகதைப்போட்டி – 2012

சிறுகதைப்போட்டி: தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், நூற்றாண்டு விழாவையொட்டிய சிறுகதைப்போட்டி - 2012 தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்  இவ்வருடம் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. அதனையொட்டி சிறுகதைப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.இப்போட்டியில் இலங்கையில் வாழும் படைப்பாளிகள் பங்கு கொள்ள முடியும். குறித்த படைப்பு இதுவரை எந்தவொரு ஊடகத்திலும் வெளிவந்ததாக இருத்தலாகாது. போட்டியாளர்கள் படைப்புக்களோடு தமது பெயர் விபரங்களை வேறாக இணைத்து அனுப்புதல் வேண்டும். பரிசில் பெறும் கதைகளோடு மேலும்தகுதியானவை நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்படும் சிறுகதைத் தொகுப்பு நூலிலும் சேர்த்துக் கொள்ளப்படும். படைப்புக்களை 30-06.2012 ற்கு முன்னராக “மலர்க்குழு, நூற்றாண்டு விழா, யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்.  என்ற முகவரிக்கோ அல்லது thondaimanaruvid@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.  முதல் மூன்று இடத்தைப் பெறும்போட்டியாளர்களுக்கு முறையே 5000,3000,2000 பணப்பரிசில் வழங்கப்படும். மேலும் 5 பேருக்கு 1000 வீதம் வழங்கப்படும். இத்தகவலை இலங்கைப் படைப்பாள நண்பர்களுக்கு தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மலர்க்குழு சார்பாக
சு. குணேஸ்வரன்

thondaimanaruvid@gmail.com