எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2012 முடிவுகள்!

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2012 முடிவுகள்!

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இந்த வகையில், 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெறுபவர்களின் பெயர் விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.

உயர் தமிழியல் விருது

எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி – பேராசிரியர் அ.சண்முகதாஸ்

தமிழியல் விருது

தலா ரூபா 15,000/-  பணத்துடன் வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த 14 மூத்த படைப்பாளிகள் –

• இனிய என்.கே.ரகுநாதன்
• இனிய சா.வே.பஞ்சாச்சரம்
• இனிய தெணியான்
• இனிய கே.ஆர்.டேவிட்
• இனிய ஜூனைதா ஷெரீப்
• இனிய சாரல் நாடன்
• இனிய மு.பொன்னம்பலம்
• இனிய ச.அருளானந்தம்
• இனிய சு.ஸ்ரீகந்தராஜா
• இனிய எஸ்.தில்லைநடராஜா
• இனிய செ.குணரெத்தினம்
• இனிய தாமரைச்செல்வி
• இனிய ஆ.மு.சி.வேலழகன்
• இனிய எஸ்.முத்துக்குமாரன்

தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது

ரூபா 25,000/-  பணத்துடன் கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருது பெறும் அயல்நாட்டுப் படைப்பாளி – • வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச. கருணாநிதி ( துணைத் தலைவர், தமிழ்ச் சங்கம், இராமநாதபுர மாவட்டம், தமிழ்நாடு )

இனநல்லுறவு தமிழியல் விருது

ரூபா 10,000/-  பணத்துடன் வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழிப் படைப்பாளி – • இனிய சுனந்த தேசப்பிரிய

ஓவியருக்கான தமிழியல் விருது

ரூபா 10,000/-  பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர் – •இனிய ஆசை இராசையா

சிறந்த நூலுக்கான தமிழியல் விருது

2011 யில் வெளிவந்த தமிழியல் விருது பெறும் சிறந்த 10 நூல்கள்.

சிறுகதை

ரூபா 10,000/-  பணத்துடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது
அகில் எழுதிய கூடுகள் சிதைந்தபோது…
 
நாவல்

ரூபா 10,000/-  பணத்துடன் துறையூர் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது – அகளங்கன் எழுதிய அலைக்குமிழ்
 
கவிதை

ரூபா 10,000/-  பணத்துடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது கவிஞர் குறிஞ்சிவாணன் எழுதிய துயரம் சுமக்கும் தோழர்களாய்
 
சிறுவர் இலக்கியம்

ரூபா 10,000/-  பணத்துடன் தகவம் வ.இராசையா தமிழியல் விருது மாவை நித்தியானந்தன் எழுதிய சட்டியும் குட்டியும்
 
நாடகம்

ரூபா 10,000/-  பணத்துடன் கலைஞர் அழ.அழகரெத்தினம் தமிழியல் விருது க.இ.கமலநாதன் எழுதிய ஆச்சி… அச்சாப்பாட்டி
 
ஆவணமாக்கல்

ரூபா 10,000/-  பணத்துடன் கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது என்.செல்வராஜா எழுதிய நூல்த் தேட்டம்
 
சமயம்
ரூபா 10,000/-  பணத்துடன் அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது – முகில்வண்ணன் எழுதிய பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்
 
கட்டுரை

ரூபா 10,000/-  பணத்துடன் செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஓர் அறிமுகம்
 
வரலாறு

ரூபா 10,000/-  பணத்துடன் வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது எம்.சி.எம்.ஷெரீப் எழுதிய சுவடுகள்
 
ஆய்வு

ரூபா 10,000/-  பணத்துடன் பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது – வாகரைவாணன் எழுதிய கிழக்கிலங்கைத் தமிழகம்

இவ்விருதுகள் 2013 ஒக்டோபர் மாதம் நடைபெறும் தமிழியல் விருதுவழங்கும் நிகழ்வின்போது வழங்கிக் கௌரவிக்கப்படும்.

டாக்டர் ஓ.கே.குணநாதன்
மேலாளர்,
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.

editor@tamilauthors.com