ரொறன்ரோவில் பட்டமளிப்பு விழா – 2013

இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. கனடாவில் உள்ள கலை ஆர்வம் மிக்க மாணவர்களுக்கான பொதுப் பரிட்சையில் சித்தியடைந்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திரு திருமதி குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்து கனடிய தேசிய கீதம் கல்லூரிக்கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து எம்மினத்திற்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. செல்வி அருசி மகேஸ்வரன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராவும், திருமதி வனிதா குகேந்திரன் தொடர்பாளராகவும்  கடமையாற்றினார்கள்.
 
இந்த நிகழ்வின்போது பல நடனக் கல்லூரிகளில் இருந்தும் மிருதங்க வயலின் இசைக் கல்லூரிகளில் இருந்தும் சித்தியடைந்த பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் இயக்குணர்களில் ஒருவரான குகேந்திரன் கனகேந்திரன் தனது வரவேற்புரையில் இயல் இசையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்படுவதாகவும், செய்கைமுறை பயிற்சிமுறை இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாகவும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்குபற்றலாம் எனவும் இன்னும் பல நாடுகளுக்கு இது விரிவு படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டு பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்றார்.

இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில் புலம் பெயர்ந்த மண்ணில் இத்தகைய கலைகளைக் கற்பது ஏன் அவசியம் என்பதையும், எமது மொழி பண்படு கலாச்சாரத்தை அழிந்து போகாமல் எமது அடுத்த தலைமுறையினர்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும், தங்கள் பொன்னான நேரத்தை இதற்காகச் செலவிடும் மணவ மாணவிகளுக்கும், அதற்கு உறுதுணையாக நிற்கும் பெற்றோருக்கும், இக் கலைகளைக் கற்பிற்கும் ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
 
இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

தொடர்ந்து பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு திரு திருமதி குரு அரவிந்தன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள். நடன ஆசிரியை திருமதி லலிதா கதிர்காமன் அவர்கள் மன்றத்தின் சார்பாக நன்றியுரை தெரிவித்ததைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவுற்றது.

இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

kuruaravinthan@hotmail.com