உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஜனவரி 2017

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இது ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி. இந்த ஜனவரி  மாதப் போட்டியின் தலைப்பு -(‘உனக்கு என்ன லாபம்?’)

போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்

போட்டி விதிகள்…
எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது

ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவிதைகள் அனுப்பும் போது தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே இருந்து போட்டிக்கவிதைகள் அனுப்ப வேண்டும் முடியாவிடின் தடாகம் (இன் பொக்ஸ் பக்கத்திற்கு)அனுப்பி வைக்கவும்

இன்னுமொருவர் முகவரியில் இருந்து அனுப்புவதையும்.முக நூல் இன் பொக்ஸ்க்கு,அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே thadagamkalaiilakkiyavattam@gm ail.com

போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற்பெயருடன்
,புனைப் பெயர்,
முழுவிலாசம்,
கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள
தமது சொந்த புகைப் படம்
தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்

அத்தோடு கவிதைகளை கூகுளில் (google)தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும் பொது தளத்திற்கு போட்டிக்காக அனுப்பும் புகைப்படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவும்

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு”கவியருவி பட்டமும்,சான்றிதழும்”
இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு “கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு “கவின்கலை” பட்டமும் ,சான்றிதழும்
மாதத்தின் சிறந்த கவிதைக்கு “கவினெழி ” பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது

எங்களது பணி! அற்புதமான பணி!!
மாறுபட்ட கோணங்களில் , சம காலத்தைபற்றி சிந்தியுங்கள்அருமையான கவிதைகளை எழுதுங்கள். இங்கு போட்டியில் பங்கு பற்றும் கவியுள்ளங்கள் என் கலைத்தாயின் பிள்ளைகள். அதனால் யாரையும் ,எக் காரணம் கொண்டும் நாம் பிரித்துப் பார்க்கமாட்டோம்

அவர்களது வளர்ச்சிக்குப் பின்னும் ,முன்னும் துணையாய் இருக்கின்றோம். சிந்தணைத் துளிகள் கொட்டும் போது கவிதை பிறக்கிறது. அது தடாகத்தின் வரம் என்று மகிழ்ச்சி பெறுவோம். பொது தளத்தில் போட்டியாளர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களும் இங்கு கவிதைகளை அனுப்புவதன் மூலம் மன மகிழ்வு பெறுகின்றார்கள். என்பதை புரிந்து கொள்ளுங்கள் அவர்களது சிறந்த கவிதைகள் போட்டியை சிறப்பிப்பதோடு .வளர்கின்றவர்களுக்கு  வழி காட்டுவதாகவும் அமைகின்றது அவர்கள் தடாகத்தின் ஊக்குவிப்பாளார்கள் என்பது குறிப்பித்தக்கது

போட்டி சம்மந்தமாக தேவையற்ற விடயங்களையும் .விவாதங்களையும் நாம்தவிர்த்துக் கொள்கின்றோம்

தடாகத்தில் தாமரைகள் இன்னும் இன்னுமாய் பூத்துக் கொண்டே இருப்பது கண்டு நாம் மன மகிழ்ச்சியோடு
அடைகின்றோம்

இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது

தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை

இம் மாதம்( ஜனவரி  ) 31ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்)

போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்

இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கிய  வட்டம் ஆகும்.

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி

அன்புடன் லூசியா  கூஞஞெ(தலைவி  நிர்வாகக் குழு)
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

sk.risvi@gmail.com