அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா  2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா, இம்முறை மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017 ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு   Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபத்தில்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic – 3170) நடைபெறும்.

மெல்பன், சிட்னி, கன்பரா, பிறிஸ்பேர்ண், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களிலிருந்து வருகைதரும்  எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபற்றும் இவ்விழாவில்  கருத்தரங்கு, மொழிபெயர்ப்பரங்கு, வாசிப்பு அனுபவப்பகிர்வரங்கு, குறும்பட – ஆவணப்படக்காட்சி என்பனவும் இடம்பெறும்.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் உறுப்பினர்களையும், கலை , இலக்கிய, சமூக ஆர்வலர்களையும்  ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்களையும்  சங்கம்   அழைக்கின்றது.

நிகழ்ச்சி இலவசம். நிகழ்ச்சிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பெயர்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு (25-04-2017) முன்னர் பதிவுசெய்துகொள்ளவும். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் செயற்குழு

atlas2501206@gmail.com