யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019) விழா பற்றிய அறிவித்தல்!

யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019)  விழா மலருக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019)  விழா மலருக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

வணக்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம்-கனடா ஆண்டுதோறும் வெளியிடுகின்ற கலையரசி மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.  கடந்த ஆண்டுகளில் கலையரசி என்கிற உபகுழுவினூடாக நெறிப்படுத்தப்பட்ட கலையரசி நிகழ்வும் மலர் வெளியீடும் இவ்வாண்டு முதலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கலை-மரபுரிமை உபகுழு என்கிற ஆழ்ந்தகன்ற நோக்குடன் பரிணமித்த குழுவினூடாக நெறிப்படுத்தப்படுகின்றது,  

இதனடிப்படையில் இவ்வாண்டு மலருக்கான ஆக்கங்கள் வரலாறும் வரலாற்றுணர்வும் என்கிற கருப்பொருள் சார்ந்ததாக எதிர்பார்க்கப்படுகின்றன.  ஆக்கங்கள் புனைவுகளாகவோ, கட்டுரைகளாகவோ, ஆற்றுகைப் பிரதிகளாகவோ அமையலாம்.  உங்கள் ஆக்கங்கள் 800 சொற்களுக்கு உட்பட்டதாக அமைவது அவசியம்.  நீங்கள் அனுப்பிவைக்கின்ற பிரதிகள் மலரில் பிரசுரிக்கப்படுவது தொடர்பாக மலர்க்குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தயைகூர்ந்து உங்கள் ஆக்கங்களை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக ahc@jaffnahinducanada.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019)  விழா நிகழ்வுகள் பற்றி…..

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் ஒக்ரோபர் மாதம் 13 ஆம் திகதி ஒருங்கிணைக்கவுள்ள “கலையரசி 2019” இல் நடன நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்வுகள் நடத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களும் நிகழ்வுகளைப் பரிந்துரைக்க விரும்புபவர்களும் ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னதாக ahc@jaffnahinducanada.com என்கிற மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும். நீங்கள் தொடர்புகொள்ளும்போதே குறித்த கலைஞர்களின் காணொலிப் பகிர்வையும் பகிர்ந்துகொள்ளவும்.  மரபுரிமை, வரலாற்றுணர்வு சார்ந்த நிகழ்த்துகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  நிகழ்வுகள் 5 – 8 நிமிடங்கள் வரை இருக்கவேண்டும்.  நிகழ்வுகள் பற்றிய இறுதித் தீர்மாணம் கலை மரபுரிமைக் கழகத்தைச் சேர்ந்த நடுவர் குழுவால் தீர்மாணிக்கப்படும்.

தோழமையுடன்
கலை – மரபுரிமைக் கழகம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா
தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம் 416 854 6768

Ken Varatha
K.Kanagavaratha
Secretary JHCA Canada

JHCA Canada <secretary@jaffnahinducanada.com>