கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான ‘பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கவும். ‘கணையாழி’ சஞ்சிகை இணையப்பதிப்பாக வெளியாகின்றது. வாங்கிப்படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய இணைப்பு: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/
இதுவரை ‘கணையாழி’ சஞ்சிகையில் வெளியான ஏனைய எனது படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 – அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் – வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏற்கனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 – சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் – வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 – பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் – வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: ‘சொந்தக்காரன்’ (சிறுகதை) – வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் – வ.ந.கிரிதரன்-
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் – வ.ந.கிரிதரன் –
7. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். – வ.ந.கிரிதரன் –
9. கணையாழி: மார்ச் 2020: விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை’
10. கணையாழி ஏப்ரில் 2020: ‘பிரமிளின் காலவெளி: கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’
11.* கணையாழி நிறுவனம் வெளியிட்ட ‘கணையாழிக்கட்டுரைகள் (1995 -2000) தொகுப்பில் எனது கட்டுரைகளான ‘அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்’, ‘பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்’ ஆகியவை வெளியாகியுள்ளன.
ngiri2704@rogers.com