பேசாமொழி 24வது இதழ் வெளியாகிவிட்டது…

பேசாமொழி 24வது இதழ் வெளியாகிவிட்டது...நண்பர்களே மாற்று சினிமா முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 24வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், பல முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டொராண்ட்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி இயக்கமான “படிமை” யின் 3வது அணியை சேர்ந்த மாணவரின் முதல் கட்டுரை இது. இது தவிர, லத்தீன் அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமான கறுப்பு ஓர்ஃபியூ திரைப்படம் பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், பெர்லின் சுவர் தகர்ப்பு பின்னணியில் வெளியாகியிருக்கும் நோ பிளேஸ் டு கோ படம் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், தவறாமல் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.

 நடிகர் சிவாஜி கணேஷன் பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளும் பிலிம் நியூஸ் ஆனந்தன் சில முக்கியமான சம்பவங்களை நினைவு கூர்கிறார். நண்பர்கள் தவறவே விடக் கூடாத கட்டுரை. கட்டுரையில் இருக்கும் சில முக்கியமான விடயங்களை இங்கே தவிர்த்திருக்கிறேன். கட்டுரையை படித்து பாருங்கள். சிவாஜியை அறிந்துக்கொள்ள உதவும்.

மொழியாக்க முயற்சிகளான, யுகேந்திரனின் காணும் முறைகள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் கட்டுரைகளும் இந்த இதழுக்கு சிறப்பு சேர்ப்பவை. இவைகள் தவிர, இலங்கை தமிழ் சினிமாவின் கதை, சத்யஜித் ராய் பற்றிய அறந்தை மணியன் தொடர், வருணனின் சொர்க்கத்தின் நாட்கள், பி.கே. நாயரின் தொடர் ஆகிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியிருக்கின்றன. நண்பர்கள் எல்லாக் கட்டுரைகளையும் அவசியம் வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_24.html
தொடர்புக்கு: pesaamoli@gmail.com
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com | thamizhstudio@gmail.com