அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா (1989 – 2014)

06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174, Australia )

இலங்கையில்  முன்னர்  நீடித்த உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம்  ஆண்டு  முதல்  அவுஸ்திரேலியா உட்பட  பல  வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து  வாழும்  அன்பர்களின்  ஆதரவுடன்  நிதியுதவி  வழங்கி  குறிப்பிட்ட  மாணவர்களின்  எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  இந்த ஆண்டில் (2014)  தனது  25  வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு  வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.  

1.   இலங்கையில்  வடக்கு   கிழக்கு   மாகாணங்களில்    யாழ்ப்பாணம், கிளிநொச்சி,   வவுனியா,    முல்லைத்தீவு,    மன்னார்,    மட்டக்களப்பு, திருகோணமலை,   அம்பாறை    முதலான   மாவட்டங்களில்   போரினால்   பெற்றவர்களை    குடும்பத்தின்   மூல   உழைப்பாளிகளை   இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கும்    மற்றும்    இடப்பெயர்வினால்     புத்தளம்  கம்பஹா    மாவட்டங்களுக்கு   இடம்பெயர்ந்த    பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்       கல்வி   நிதியம்   கடந்த   25   வருட  காலத்தில்   உதவியதுடன்   அவர்களின்   கல்வி    முன்னேற்றத்தையும்   அவதானித்து வந்துள்ளது.

2.   கடந்த  25  வருட  காலத்தில்   ஆயிரத்திற்கும்   மேற்பட்ட    தமிழ் மாணவர்கள்   இந்த   உதவித்திட்டத்தினால்    பயனும்    பலனும் அடைந்துள்ளனர்.   இம்மாணவர்களுக்கு   உதவிய   அன்பர்களுக்கு மாணவர்கள்    நிதியுதவி   பெற்றதை    அத்தாட்சிப்படுத்தும்    கடிதங்கள்   கல்வி    முன்னேற்றச்சான்றிதழ்கள்    என்பனவும்    அனுப்பிவைக்கப்படுகின்றன.

3.    2004   ஆம்   ஆண்டு   இறுதியில்   வடக்கு   கிழக்கு   மாகாணங்களில்   ஏற்பட்ட  சுனாமி   கடற்கோள்    அநர்த்தத்தின்பொழுது    பாதிக்கப்பட்ட மாணவர்களின்    குடும்பங்களுக்கு    உதவும்   முகமாக    இரண்டு கொல்கலன்களில்   கப்பல்    மூலமாக    உடு புடவைகள்,    உலர் உணவுப்பொருட்கள் ,   பாய்கள்    மற்றும்   அத்தியாவசிய    பொருட்களை  இலங்கைக்கு    அனுப்பியுள்ள      கல்வி  நிதியம்    கிழக்கு மாகாணத்திற்கும்    வன்னிப்பகுதிக்கும்    அவற்றை     விநியோகித்தது.

4.   குறிப்பிட்ட   கடற்கோள்  அநர்த்தத்தினால்   பெரிதும்   பாதிக்கப்பட்ட  கிழக்கு   பல்கலைக்கழகத்தில்   பயின்ற  25   மாணவர்கள்    தமது   பட்டப்படிப்பினை   நிறைவுசெய்யும்   வரையில்    கல்வி  நிதியம்  அவர்களுக்கு   உதவி   வழங்கியது.  அனைத்து   மாணவர்களும்    தமது   பட்டப்படிப்பினை    பூர்த்தி   செய்தவாறு    தொழில்   துறைகளில்   ஈடுபட்டுவருகின்றனர்.

06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174, Australia )

5.   வன்னியில்  2009   ஆம்   ஆண்டு    போர்    உக்கிரமடைந்திருந்ததையடுத்து  அகதி    முகாம்களுக்கு    இடம்பெயர்ந்த    மக்களின்   தேவைகளைக் கவனிப்பதற்காக    வவுனியாவில்   இயங்கும்   நலிவுற்ற    சமூக   அபிவிருத்திக்கான   தன்னார்வ    தொண்டு   நிறுவனத்தின்   ஊடாக   நிதியுதவி    அனுப்பியது.

6.    போர்    முடிவுற்றதும்   அகதி  முகாம்களில்    தங்கியிருந்து   படித்து வவுனியா    பல்கலைக்கழக    வளாகத்திற்குத்தெரிவான   10  மாணவர்களின்   கல்வித்தேவைக்கு    நிதியம்    தொடர்ச்சியாக    உதவியதுடன்.     குறிப்பிட்ட  மாணவர்கள்    முகாம்களிலிருந்து    பல்கலைக்கழக    வளாகம்  செல்வதற்கு  துவிச்சக்கர    வண்டிகளை    அன்பர்களின்   ஆதரவுடன்    அன்பளிப்பு   செய்துள்ளது.    குறிப்பிட்ட   அனைத்து   மாணவர்களும்   தமது  பட்டப்படிப்பினை    பூர்த்தி   செய்துள்ளனர்.

7.   கிழக்கு    பல்கலைக்கழகத்தில்  கல்வி  நிதியத்தின் உதவியுடன்தமது கல்வியைத்தொடர்ந்த    மேலும்   28    மாணவர்களில்  சிலர்   தமது   பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டனர். மேலும் சிலர் இந்த  ஆண்டு  (2014)    இறுதியில் தமது  படிப்பினை   நிறைவுசெய்கின்றனர்.

8.   இலங்கை   மாணவர்   கல்வி    நிதியத்தின்   உதவிபெற்ற   பல மாணவர்கள் பல்கலைக்கழக   பட்டதாரிகளாகி    தற்பொழுது  அரச மற்றும்   தனியார்    துறைகளில்    பணியாற்றுகின்றனர். பலர்    பாடசாலை  அதிபர்களாக    ஆசிரியர்களாக    பொறியியலாளர்களாக   மருத்துவர்களாக  கணக்காளர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.   சிலர்    வெளிநாடுகளில்    வேலைவாய்ப்பு    பெற்று    புலம்பெயர்ந்து   சென்றுள்ளனர்.

9.   நீடித்த   போர்   முடிவடைந்ததைத்  தொடர்ந்து   சரணடைந்த  முன்னாள்   போராளி    மாணவர்களின்  கல்வித்தேவையை   கவனிக்கவும்   கல்வி   நிதியம்  ஆக்கபூர்வமான    நடவடிக்கைகளை    மேற்கொண்டது.  350  இற்கும்   மேற்பட்ட    முன்னாள்    போராளி   மாணவர்களுக்கு    விசேட வகுப்புகளை   நடத்தி   அதற்கான   பணிகளில்   சில   ஆசிரியர்களையும்   ஈடுபடுத்தி    அந்த   மாணவர்களை    க.பொ.த சாதாரண  தரம் (G.C.E O/L )  க.பொ.த   உயர்தரம்   G.C.E. A/L)     பரீட்சைகளில்   தோற்றச்செய்ய நடவடிக்கை    எடுக்கப்பட்டது.   பின்னர்   இம்மாணவர்கள்    அனைவரும்   வவுனியா    பம்பைமடுவில்    பெற்றோரிடம்   ஒப்படைக்கப்பட்டனர்.

10.  போருக்குப்பின்னர் –  இலங்கையில்    கல்வி நிதியத்தின்   உதவிபெறும்    மாணவர்களுடனான    சந்திப்புகள் –  ஒன்று கூடல்கள் –  தகவல் அமர்வுகள்   ஒவ்வொரு வருடமும்    வடக்கு  –  கிழக்கு மாகாணங்களில்      நடைபெறுகிறது.   இம்மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள்    இலங்கை   சென்று     தாம்   நிதியம்   ஊடாக   உதவிவரும்  மாணவர்களை   நேரில் சந்தித்து கலந்துரையாடிவருகின்றனர். இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்  கடந்த 25 வருடங்களில் மேற்கொண்ட    கல்விப்பணிகளின்  சுருக்கமான   தகவல்களையே  இரக்கமுள்ள    தமிழ்   அன்பர்களிடம்    தெரிவிக்கின்றோம்.   கடந்த   25   வருட காலத்தில் வருடந்தோறும்   வெளியிடப்பட்ட     ஆண்டறிக்கைகளில்   மேலதிக   விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் விபரங்களை  கல்வி   நிதியத்தின்   இணையத்தளத்திலும் பார்க்கலாம். web: www.csefund.org

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு  வெள்ளிவிழா  (1989 - 2014)

எதிர்வரும்   2014 செப்டெம்பர் மாதம் 06 ஆம்  திகதி  சனிக்கிழமை  மெல்பனில்  – Noble Park Community Centre மண்டபத்தில்  (Memorial Drive, Noble Park, Vic-3174)  மாலை 6 மணிக்கு   –   நிதியத்தின்  25  வருட நிறைவு வெள்ளிவிழா   ஒன்று கூடல்  தகவல்   அமர்வுடன்   இராப்போசன   விருந்து  நிகழ்ச்சியையும் நிதியம் ஒழுங்குசெய்துள்ளது. இந்நிகழ்ச்சியின்   மூலம்   திரட்டப்படும்  நிதி –  கல்வி  நிதியத்தின்  உதவி பெற்றுவரும்  – இதுவரை காலமும்  உதவும் அன்பர்கள்   தெரிவுசெய்யப்படாத மாணவர்களின்   கல்வி வளர்ச்சிக்கு    வழங்கப்படும்.  இந்த வெள்ளிவிழா  ஒன்று கூடல்  சிறப்பாகவும்    வெற்றிகரமாகவும் நடப்பதற்கு இரக்கமுள்ள  தமிழ் அன்பர்களின் ஆதரவையும்  நிதியம் எதிர்பார்க்கின்றது.

வெள்ளிவிழாவில்   கலந்து   சிறப்பிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைப்பதுடன்,   இந்நிகழ்வு   முழுமையாகி   நிதியம்    தொடர்ந்தும் இலங்கையில்   பாதிக்கப்பட்ட  ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவுவதற்காக   தங்களால்    இயன்ற    நிதியுதவியை  வழங்கி    ஒத்துழைப்பு நல்குமாறு   நிதியத்தின்   சார்பிலும் பாதிக்கப்பட்ட   மாணவர்களின்   சார்பிலும்    இலங்கை   மாணவர் கல்வி   நிதியம்       அன்புடன்   கேட்டுக்கொள்கின்றது.

நிதியுதவி   கிடைக்கும்   பட்சத்தில்    அதற்கான    பற்றுச்சீட்டுக்கள்    அனுப்பிவைக்கப்படுவதுடன்    எதிர்வரும்   ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  வெளியாகும்    ஆண்டறிக்கையிலும்  நன்கொடை  பதிவுசெய்யப்படும்.

நன்கொடைகளை  பின்வரும்   வங்கிக்கணக்கிலக்கத்தில் வைப்பிலிடும்   பட்சத்தில்    நிதியத்தின்   மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கவும்.

காசோலை  அனுப்புவதாயின்  பின்வரும்   முகவரிக்கு    தங்களின் முகவரி   மற்றும்    தொலைபேசி   இலக்கம்  மின்னஞ்சல்  முதலான   விபரங்களையும் அனுப்பிவைக்கவும். 

C.S.E.F  –  P.O.Box:  317, Brunswick, Victoria- 3056
Bank Details: A/C Name:  Ceylon Students  Educational   Fund (Inc)
Bank: Commonwealth Bank of Australia . Branch: Brunswick, Victoria – 3056
BSB No: 063 111    A/C No: 1063 4651

மேலதிக    விபரங்கள்   தேவைப்படின்    பின்வருவோருடன்    தொலைபேசியில்   தொடர்புகொள்ளலாம்.  
  
Mrs. Arun Vijayarani   (Chairman)   (03) 949 97 176   
Mr. S. Cornelius (Secretary) 0425 728839
Mrs.Vithiya Sriskantharajah   (Treasurer)   0404 80 82 50 
Mr.L.Murugapoopathy   (Asst. Treasurer)  (03) 513 46 771  –  04166 25 766

இலங்கையில்  முன்னர்  நீடித்த உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம்  ஆண்டு  முதல்  அவுஸ்திரேலியா உட்பட  பல  வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து  வாழும்  அன்பர்களின்  ஆதரவுடன்  நிதியுதவி  வழங்கி  குறிப்பிட்ட  மாணவர்களின்  எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  இந்த ஆண்டில் (2014)  தனது  25  வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு  வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

letchumananm@gmail.com