வாசிப்பும், யோசிப்பும் 259: அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘வில்லூன்றி மயானம்’

மல்லிகை ஆண்டு மலர் 1967அறிஞர் அ.ந.கந்தசாமிநூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது ‘மல்லிகை’ சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘வில்லூன்றி மயானம்‘ என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட ‘வில்லூன்றி மயானப்படுகொலை’ பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி ‘தினகரன்’ தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை ‘வில்லூன்றி மயானம்’ மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:  ” வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த ஆக்க எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானோ அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும், அச்சுவேலியையும், சங்கானையையும் கண்டு விட்டேன். அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறு சம்பவம்.ஆனால் என்னைப்பொறுத்த வரையில் வில்லூன்றித் தீபபொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அப்போதே நான் நம்பினேன். அது வீண் போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே – மரணத்தில் கூட எமக்குச் சமத்துவமில்லை என்ற அந்த எண்ணமே – நாளடைவில் யாழ்ப்பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்கு வித்திட்டது. அதனால் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சியாக யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

‘வில்லூன்றித் தன்னில் நாம் கண்ட தீ வெறும் தீயன்று’ என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கவிதைத்தேவி என் நாவிலேறி முழங்கினாள். வில்லூன்றிச் சம்பவம் ‘வரப்போகும் நவயுகத்தின் வளக்காலை இளம் பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பல்’ என்று கூவினாள். ‘வில்லூன்றித் திருத்தலத்தைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம், புனித பூமி’ என்று புரட்சியின் மண்ணுக்கு அஞ்சலி செலுத்தினாள் “

இவ்விதம் ‘வில்லூன்றிப்படுகொலையினை’ நினைவு கூரும் அ.ந.க கட்டுரையின் முடிவில் ‘உயிர் விட்டவர்களின் மரணத்தால் நாம் பயனடைய வேண்டும். சமத்துவப் போரை எல்லாத்துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தீண்டாமைப்பேயை நாட்டை விட்டு முற்றாக ஓட்டும்வரை எமக்கு ஓய்வில்லை. ஒழிவில்லை என்று தீர்மானிக்க வேண்டும். பேச்சால், செயலால், எழுத்தால் அதற்கு ஆதரவு நல்க வேண்டும்.’ என்று கூறுவதுடன கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் தீண்டாமைக்கெதிரான கவிதை வரிகளையும் நினைவு கூர்வார்.

வில்லூன்றி மயானப்படுகொலையினைத் தனது இருபதாவது வயதில் எழுதிய அ.ந.க தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் அக்கவிதையையும், அப்படுகொலையினையும் நினைவு கூரும் அ.ந.க.வின் இக்கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவரது கட்டுரைகளில் சிறப்பான இடத்தினைப்பெறும் கட்டுரைகளிலொன்று.

944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட ‘வில்லூன்றி மயானப்படுகொலை’ பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி ‘தினகரன்’ தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை ‘வில்லூன்றி மயானம்’ மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது.

இக்கட்டுரையில் அவர் குறிப்பிடும் பின்வருமாறு கூறுவார்: ” வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த ஆக்க எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானோ அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும், அச்சுவேலியையும், சங்கானையையும் கண்டு விட்டேன். அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறு சம்பவம்.ஆனால் என்னைப்பொறுத்த வரையில் வில்லூன்றித் தீபபொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அப்போதே நான் நம்பினேன். அது வீண் போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே – மரணத்தில் கூட எமக்குச் சமத்துவமில்லை என்ற அந்த எண்ணமே – நாளடைவில் யாழ்ப்பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்கு வித்திட்டது. அதனால் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சியாக யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

‘வில்லூன்றித் தன்னில் நாம் கண்ட தீ வெறும் தீயன்று’ என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கவிதைத்தேவி என் நாவிலேறி முழங்கினாள். வில்லூன்றிச் சம்பவம் ‘வரப்போகும் நவயுகத்தின் வளக்காலை இளம் பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பல்’ என்று கூவினாள். ‘வில்லூன்றித் திருத்தலத்தைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம், புனித பூமி’ என்று புரட்சியின் மண்ணுக்கு அஞ்சலி செலுத்தினாள் “

இவ்விதம் ‘வில்லூன்றிப்படுகொலையினை’ நினைவு கூரும் அ.ந.க கட்டுரையின் முடிவில் ‘உயிர் விட்டவர்களின் மரணத்தால் நாம் பயனடைய வேண்டும். சமத்துவப் போரை எல்லாத்துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தீண்டாமைப்பேயை நாட்டை விட்டு முற்றாக ஓட்டும்வரை எமக்கு ஓய்வில்லை. ஒழிவில்லை என்று தீர்மானிக்க வேண்டும். பேச்சால், செயலால், எழுத்தால் அதற்கு ஆதரவு நல்க வேண்டும்.’ என்று கூறுவதுடன கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் தீண்டாமைக்கெதிரான கவிதை வரிகளையும் நினைவு கூர்வார்.

வில்லூன்றி மயானப்படுகொலையினைத் தனது இருபதாவது வயதில் எழுதிய அ.ந.க தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் அக்கவிதையையும், அப்படுகொலையினையும் நினைவு கூரும் இக்கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவரது கட்டுரைகளில் சிறப்பான இடத்தினைப்பெறும் கட்டுரைகளிலொன்று.

*****************************************************************
கவிதை: வில்லூன்றி மயானம்! – அ.ந.கந்தசாமி –

நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்கிங் காதரவு, நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புதைத்திடுவோம் வாரீர் வாரீர்.

– தினகரன் 9.11.1944 –