சிறிலங்கா துணைத் தூதரகம் முன் கனேடியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (ஜூன் 26, 2012)!

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாதுகாப்புக்காக சிறீலங்கா துணைத் தூதுவராலயம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன் பெருமளவிலான ஓன்ரேறியோ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  “தயவுசெய்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பிறந்த நாட்டில் இடம்பெறும் நிலப்பறிப்பையும் பண்பாட்டுப் படுகொலையையும் தடுத்து நிறுத்தங்கள்” (Please Help to Prevent Land Grab and Cultural Genocide of Sri Lankan Thamils in their own Country of Birth) என்று எழுதப்பட்ட  பெரிய பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டன.

மேலும் தமிழர்களுக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்களை உள்ளடக்கிய தன்னாட்சி வேண்டும் (Tamils Want Self rule Including Land and Police Powers) சிறீலங்கா தமிழினப் படுகொலையை நிறுத்து (Sri Lanka Stop Genocide of Tamils) சிறீலங்கா திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை நிறுத்து (Sri Lanka Stop Planned State Sponsored Sinhalese Colonization) சிறீலங்கா தமிழர்களது நிலம் வீடு அபகரிப்பை நிறுத்து (Sri Lanka Stop Grabbing Tamils’ Lands and Homes) போன்ற பல முழக்க அட்டைகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர் நின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (26-06-2012) திருமுறிகண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சமாந்தரமாக ரொறன்றோவிலும் வன்கூவரிலும்  கவனயீர்ப்புப் போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) கனடிய தமிழர் பேரவை, கனடிய தேசிய மக்கள் அவை, கனடிய மூத்தோர் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி 6 மணிவரை நடைபெற்ற இப்போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் வெளியுறவுத் துறையின் கனடாப் பிரதிநிதி திரு நிமல் விநாயகமூர்த்தி ஒருங்கிணைத்து இருந்தார். அன்றைய நாள் வார வேலை நாளாகவும் குறுகிய கால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தும் பெருமளவிலான மக்கள் பங்குபற்றிச்  சிறப்பித்தார்கள். 

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

கவனஈர்ப்புப் போராட்டத்தின் முடிவில் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை உறுப்பினர்கள் வின்  மகாலிங்கம் மற்றும் மா.க. ஈழவேந்தன், கனடிய தமிழர் பேரவைப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, கனடிய தேசிய மக்கள் அவை இயக்குநர் சுப்பிரமணியம் இராஜ்குமார், ததேகூ (கனடா) தலைவர் வே.தங்கவேலு, மூத்தோர் அமைப்பின் தலைவர் ஆசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் உரையாற்றினர்.

திரு வின் மகாலிங்கம் “நமது மண் நமக்கே சொந்தம். ஒரு இனத்தின் இருப்பின் அத்திவாரம் அந்த இனத்தின் நிலம் தான். நிலத்தை இழந்தால் இன அடையாளத்தையே இழந்து விடுவோம். நிலத்தை இழந்த பின் தேசியம் என்றோ தமிழரசு என்றோ கதைப்பதில் அர்த்தமிருக்காது. அதனால்த்தான் மண் அபகரிப்பில்  சனாதிபதி மகிந்த இராசபக்சா குறியாகவும் முனைப்பாகவும் வேகமாகவும் செயற்படுகிறார். வெளிநாடுகளின் அழுத்தங்கள் அதிகரிக்கு முன்னர் காரியத்தை முடித்துவிடத் துடிக்கிறார். உள்நாட்டு வெளிநாட்டு சூழ்நிலைகள் கனிந்து வரட்டும் என்று நாங்கள் காத்திருந்தால் அங்கே எல்லாம் முடிந்து  இனமே இல்லாமல்  போய்விடும். இன்று இராணுவத்தின் இரும்புக் கைகளில் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தாயக மக்களே மிக எழுச்சியுடன் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.   நாமும் முன்னெப் பொழுதையும் விட இன்றைய வாய்ப்பினைத் தவறவிடாது ஒற்றுமையாக ஓரணியில்  திரண்டு போராட வேண்டும்”  எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

அடுத்துப் பேசிய ததேக (கனடா) தலைவர் திரு தங்கவேலு (நக்கீரன்) ” சுதந்திரத்துக்குப் பின்னர் வட – கிழக்கில் சிறீலங்கா அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.  இப்போது வடக்கிலும் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் முயற்சி மண்பறிப்பு, சிங்களக் குடியேற்றம் மூலம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மகிந்த இராசபக்சேயின் கொடுங்கோல் ஆட்சியில் சிங்கள மயமாக்கல் மட்டுமல்லாது பவுத்த மயமாக்கலும் துரித கெதியில் இடம்பெறுகிறது” எனக் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

அடுத்துப் பேசிய திரு சுப்பிரமணியம் இராஜ்குமார்  அவர்கள் ஒற்றுமையின்  அவசியம்  பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் இப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும்  தெரிவித்தார்.

athangav@sympatico.ca