வாசிப்பும், யோசிப்பும் 261: எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும்

எழுத்தாளர் முருகபூபதிஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் வெளியான என்னுடனான நேர்காணல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும் ஒரு பதிவுக்காக.

முருகபூபதி: “அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஞானம் இதழ்களில் வெளியான தங்கள் நேர்காணல் படித்தேன். வாழ்த்துக்கள். தங்களைப்பற்றிய முழுமையான அறிமுகம் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் வாழ்வில் நிறைய சாதித்திருக்கிறீர்கள். தங்கள் பதிவுகள் பற்றி அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களிடத்திலும் குறிப்பிட்டேன். அவர்களுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய பல விடயதானங்கள் தங்கள் பதிவுகளில் வருகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடத்திலும் பதிவுகள் பற்றி குறிப்பிட்டேன். தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இணையத்தளத்தை நடத்திக்கொண்டுமிருக்கும் தங்கள் உழைப்பு பெறுமதியானது. காலம் உங்களை மதிக்கும். வாழ்த்தும். நல்லதோர் நேர்காணலை வெளியிட்ட ஞானம் இதழுக்கும் அதற்கு வழிவகுத்த கே.எஸ். சுதாகரனுக்கும் எமது வாழ்த்துக்கள். அன்புடன், முருகபூபதி”

நான்: “அன்புள்ள திரு.முருகபூபதி அவர்களுக்கு, நன்றி உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு. ‘பதிவுகள்’ மூலம் நானடைந்த முக்கியமான நன்மைகளிலொன்று உங்களைப்போன்ற படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதுதான். அமரர் வெ.சா, நீங்கள் மற்றும் இன்னும் பலருடன் இலக்கியரீதியிலான தொடர்புகளும், கருத்துப்பரிமாறல்களும் மிகுந்த பயனுள்ளவை. உங்களது கலை, இலக்கியக் கட்டுரைகள் உண்மையில் சிறப்பானவை மட்டுமல்ல ஆவணச்சிறப்பும் மிக்கவை. ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனாகவும் விளங்குபவை. எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதுடன் நின்று விடாது , அவர்களுக்கும் உங்கள் கருத்துகளைத்தெரிவிப்பதானது உங்களது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது. உங்களது கருத்துகளையும், எழுத்துக்களையும் நான் உயர்வாக மதிக்கின்றேன். நன்றி உங்கள் கருத்துகளுக்கு. அன்புடன், வ.ந.கிரிதரன்”

ngiri2704@rogers.com