தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ்விழா

தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ்விழா

தமிழ் உறவுகளுக்கு வணக்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 தமிழ்விழா ஜூலை 1 (வெள்ளி) முதல் ஜூலை 4 (திங்கள்) வரை நியூ ஜெர்சியில், ட்ரென்டன் நகரில் நடைபெறவுள்ளது. நீங்களனைவரும் பேரவையின் தமிழ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கத் திட்டமிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். விழாவிற்கு இன்னும் முன்பதிவு செய்யாதவர்கள் பேரவை  இணையத்தளத்தில் பதிவுசெய்யவும்.

பேரவையின் 29-வது தமிழ்விழா, தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாகவும் பாவேந்தர் பாரதிதாசனின் 125-வது பிறந்த தினமாகவும் மலர இருக்கிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக, தஞ்சாவூர் கலைக்குழுவினர் வழங்கும் “கங்கை கொண்ட சோழன்” எனும் வரலாற்று நாடகம் நடக்கவிருக்கிறது. தமிழ்த் திரைப்படக்கலைஞர்கள் ஜெயம் ரவி அவர்களும், அரவிந்த் சாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு “தனி ஒருவன்” திரைப்படக் கருவை (Theme) மையமாகக் கொண்டு, நம்மை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

newsletter@fetna.org