வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவர் அடைந்த அவமானமும் பற்றி எழுத்தாளர் நோயல் நடேசன் எழுத்தாளர் முருகபூபதியின் கூற்றினை ஆதாரமாகக் கொண்டு முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தார்.  அதனைத்தொடர்ந்து அது பற்றி எதிர்வினைகள் சில இடப்பட்டன. அவற்றின் தொகுப்பிது ஒரு பதிவுக்காக.

Noel Nadesan, December 21 at 7:47 PM : “பிரபஞ்சன் கனடாவுக்கு அழைக்கப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார். அவரை ஒரு விழாவுக்கு அழைத்த ஒரு ஈழத்து அன்பர் (?) சொன்னபடி செய்யாமல், ஏமாற்றி திருப்பி அனுப்பிவிட்டார். தமிழகம் திரும்பியதும் பிரபஞ்சன், ” இனிமேல் எனது வாழ்வில் சந்திக்கவே விரும்பாத ஒருவரிடமிருந்து விடைபெற்றேன்” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு ஊரில் இவரை பேச அழைத்து, அந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய பாராட்டு விருது சான்றிதழை பிரேம் போட்டுக்கொடுத்தார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவரை மீண்டும் பஸ் ஏற்றிவிடாமல் நடுத்தெருவில் விட்டுச்சென்றார்கள். நடு இரவு பஸ்ஸையும் தவறவிட்டுவிட்டு, மறுநாள் அங்கிருந்து அதிகாலை ஊர் திரும்பும்போது எதற்கு இந்த வீண் சுமை என்று, அந்த பெரிய விருதுச்சான்றிதழை விதியோரத்தில் வைத்துவிட்டு பஸ் ஏறினார். இதெல்லாம் பிரபஞ்சனின் வாக்குமூலங்கள். எழுத்தாளர்கள் சம்பாதித்தவை புகழ் – விருதுகள் மட்டுமல்ல அவமானங்களும்தான்!!!??? இதுபோன்ற அவமானங்களை இனிமேல் பிரபஞ்சன் சந்திக்கமாட்டார். பிரபஞ்சனை நீண்ட காலமாகப்படிக்கின்றேன். அவர் 1965 – 2004 வரையில் எழுதிய கதைகளின் (செம்பதிப்பு ) இரண்டு பாகங்களையும் தற்போது மீண்டும் படிக்கின்றேன். 115 ஆவது கதை ” சகோதரர் அன்றோ” படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த இலக்கிய சகோதரர் விடைபெற்றுவிட்டார். அவருக்கு எமது அஞ்சலி.  – தகவல் : முருகபூபதி”

Kannan Sundaram: இது பற்றி நானும் அறிந்தேன், ஆனால் பிரபஞ்சன் வழி அல்ல. அவர் சென்றதில் என் நல்லெண்ணத்திற்கும் சிறிய இடம் உண்டு என்பதால் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.

Noel Nadesan : இந்த விடயம் நடந்து பிரபஞ்சனால் எழுதப்பட்டது . உதய ன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் என நான் அறிந்தேன். எழுத்தாளர்களை எழுத்தோடு சம்பந்தப்படுத்தியவர்கள் மதிக்காதபோது பொதுமக்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும? இதேமாதிரி சில விடயங்கள் இலங்கையிலும் நடந்தது . அதில் பாதிக்கப்பட்டவர் வெளியாலே சொல்லாததால் மவுனம் காக்கிறேன். இவை முதலாவதோ கடைசியானதோ அல்ல .

Vijaya Baskaran: ஒரு தடவை வில்லன் நடிகர் ஒருவருக்கு போதையை ஏற்றிவிட்டு தமிழர் வாழும் பகுதியில் இறக்கி காட்சிப் பொருளாக கிண்டலாக கதைத்தே அவமானப்படுத்தினார்கள்.

Giritharan Navaratnam //சொன்னபடி செய்யாமல், ஏமாற்றி திருப்பி அனுப்பிவிட்டார்.// சொன்னது என்ன என்பது பற்றி ஏதாவது தெரியுமா நடேசன்?

Noel Nadesan: I really do not know only learned from Murugapoopathy

Vijaya Baskaran : இதற்கும் விளக்கம் தேவையா?

Noel Nadesan: கனடாவில் பல இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் இருந்தும் எழுத்தாளர் அவமானப்படுத்தப்பட்ட விடயம் இந்த விடயம் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவருவது முரண்ணகையாக வில்லையா ? கிரி.

Giritharan Navaratnam : // Noel Nadesan – கனடாவில் பல இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் இருந்தும் எழுத்தாளர் அவமானப்படுத்தப்பட்ட விடயம் இந்த விடயம் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவருவது முரண்ணகையாக வில்லையா ? கிரி.// அதற்குக் காரணம் இது பற்றி எழுதிய எவரும் முழுமையான விபரங்களுடன் , பெயர்களைக் குறிப்பிட்டு எழுதாததால்தான். ஊகங்களின் அடிப்படையில் பொதுவாகக் கூறப்படும் விடயங்களை நான் கவனத்திலெடுப்பதில்லை. அத்துடன் எங்களை , வாசகர்களை, ஊகிக்கும்படி வெளிவரும் செய்திகளையும் நான் உள்வாங்குவதில்லை, பல ஊகங்களுக்கான சாத்தியங்களுள்ளதால்.மேலும் பிரபஞ்சனின் கூற்றினை உள்ளடக்கிய செய்தியினை நான் வாசித்திருக்கவில்லை. இவ்விதமான செய்திகளைத் தரும் எவரும் முழு விபரங்களையும் தரும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு எதற்காக முழு உண்மையையும் போட்டுடைப்பதில் தயக்கம். மேலுள்ள பதிவின்படி என்னுடைய ஊகம்: உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு உறுதியளித்த நிதியுதவியை அளிக்கவில்லை என்ற ஒரு முடிவுக்கு வரலாம். இன்னுமொரு முடிவு: பயணச்செலவையும் முழுமையாகக் கொடுக்கவில்லை. உண்மை என்ன? இனியாவது உண்மையைக் கூறுங்கள் நடேசன் (தெரிந்திருந்தால்), நானும் அறிந்துகொள்ளலாம். பின்னர் இது பற்றி எழுதும் சந்தர்ப்பம் வந்தால் உங்கள் கூற்றைச் சான்றாகப் பாவிக்கலாம்.

Noel Nadesan : கிரி நான் முருகபூபதியின் பதிவைப் பகிர்ந்தேன். மேலும் அவரிடம் கேட்டபோது பிரபஞ்சன் தான் கனடா சென்றதையும் வாழ்நாளில் சந்திக்க விரும்பாத மனிதர் எனக்குறிப்பிட்டிருந்தார். அதையே மீண்டும் எழுதியதாக சொன்னார். ஜமால் கசோக்கின் கொலை மாதிரி எம்மிடம் எந்த வீடியோ அல்லது ஒலிப்பதிவோ இல்லை. பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார். நான் இப்படி செய்தேன் என எவரும் வந்து ஒப்புக்கொள்ளமாட்டார்கள் . மேலும் சில உண்மையைத் தெரிந்தவர்கள் கனடாவில் இருக்கிறார்கள் . அவர்கள் முன் வந்து சொல்லமுடியும் . முருகபூபதியினதும் எனது நோக்கம் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்பதே – இதை கனடாவில் ஒருவர் செய்திருந்தால் நல்லது என்பதே எனது ஆதங்கம்

Giritharan Navaratnam : // Noel Nadesan – இதை கனடாவில் ஒருவர் செய்திருந்தால் நல்லது என்பதே எனது ஆதங்கம் .// எங்களுக்கே இப்பொழுதுதானே தெரியும். உங்களுக்கே முருகபூபதியின் பதிவைப்பார்த்துத்தானே தெரிகின்றது. யாருக்குமே தெரியாத ஒன்றை, பிரபஞ்சன் இறந்த பின்னரே வெளியே வருமொரு விடயத்தை எவ்விதம் கனடாவில் முன்னெடுத்திருக்கலாம். இப்பொழுதாவது இவ்விடயம் வெளியே வந்தது நன்மைக்கே. உங்களுக்கு இது பற்றி பிரபஞ்சன் எழுதிய கட்டுரையேதாவது இருப்பின் அது பற்றிய விபரம் தெரியுமா? தெரிந்தால் அறியத்தரவும்.

Vijaya Baskaran:  இங்கே பண்டமாற்று வியாபாரத்துக்குப் பயனபடாதவர்கள் ஏமாற்றுப்படுகிறாரகள்.இலாபம்,விளம்பரம் பிரதானம்

Cheran Rudhramoorthy:  பிரபஞ்சனை இங்கே அழைத்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிஙம். அவர் என்னுடைய முகனூலில் இல்லை என்பதால் அவரைத் தொடுக்க முடியவில்லை. கனடாவின் நல்ல இலக்கியவாதிகளின் பரிந்துரையால்தான் பிரபஞ்சன் வருகை சாத்தியமானது. எனினும் பிரபஞ்சன் வந்த பிற்பாடு எவரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் பலமுறை லோகேந்திரலிங்கத்தை அழைத்து பிரபஞ்சனுடன் பேச வேண்டும் என்று கேட்டேன். சாத்தியப் படவில்லை. இறுதியில் அவர் தமிழகம் திரும்பும் முன்பு சிறிது நேரம் பேச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பிரபஞ்சன் சொன்னதை இங்கு எழுத முடியாது. இந்த இணைப்பில் Nagamany Logendralingam, Canada Uthayan என்பதை நண்பர்கள் தொடுப்புச் செய்தால் மேலதிக விவரங்கள் தெரிய வரலாம்.

ngiri2704@rogers.com