தூறல் இதழின் 4 வது ஆண்டுவிழா

கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார். கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

ஐந்தாவது ஆண்டு விழாவை இன்னும் சிறப்பாக, குறிப்பாக இந்த இதழில் தொடர்ந்து தங்கள் ஆக்கங்களைச் சிறுவர், சுட்டிகள் பகுதிக்கு எழுதிவரும் சிறுவர்களைக் கௌரவிப்பதன் மூலம் அவர்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் எங்கள் தாய் மொழியை புலம் பெயர்ந்த மண்ணில் நிலைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் குறிப்பிட்டு, இதுவரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் ஆக்கங்களை இந்த இதழ்களில் வெளியிட்ட தூறல் இதழ் நிர்வாகத்தினரைப் பாராட்டி தனது உரையில் தெரிவித்தார். கனடாவின் சிறந்த எழுத்தாளர் அத்தனை பேரின் ஆக்கங்களும் இந்த இதழ்களில் வெளிவந்திருப்பதையும், எமது புதிய தலைமுறை எழுத்தார்களையும் கவிஞர், கட்டுரையாளர்களையும் எழுதுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்திருக்கும் தூறல் இதழின் நிர்வாக அமைப்பாளர்களை லோகன் கணபதி அவர்கள் பாராட்டி உரையாற்றினார். 
 
கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தூறல் இதழ் ஆலோசகரும் பிரபல எழுத்தாளருமான குரு அரவிந்தன் எழுத்தாளர்கள் சார்பில் உரையாற்றினார். கறுப்பு வெள்ளையில் ஒரு இதழ் தொடர்ந்து வெளிவருவதற்கே முடியாத நிலை ஏற்படும்போது வர்ணத்தில் பக்கங்களைக் கொண்ட தூறல் இதழ் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. பொழுது போக்குவதற்கு மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டி அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் தூறல் இதழ், கனடியத் தமிழ் இலக்கிய உலகைப் பிரதி பலிப்பதாகவும் இருக்கின்றது. அரசியற் கலப்பில்லாமல், எளிமையான வார்த்தைகளைக் கையாண்டு தனித்துவமாகச் செயற்படுவது இதன் சிறப்பு அம்சமாக இருக்கின்றதால் பலராலும் விரும்பி வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டு முக்கியமாக தூறல் இதழ் வளர்ச்சியில் பங்காற்றும், பிரதம ஆசிரியர் மோகன் செல்லையா அவர்களையும், நிர்வாக ஆசிரியர் எஸ் சிவா அவர்களையும், தூறல் இதழை ஆரம்பித்து வைத்த மூத்த எழுத்தாளர் என். எஸ்.சிவலிங்கம் அவர்களையும் தனது உரையில் வாழ்த்திப் பாராட்டினார்.
 
தொடர்ந்து பாடல் இசை நிகழ்ச்சியும், மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றன. தூறல் வாசகர்கள் சார்பில் மீரா இராசையா அவர்களும், சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் அவர்களும் உரையாற்றினர். ஆக்க பூர்வமான நிறை குறைகளைக் கூறி இது போன்ற இதழ்கள்தான் இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தேவையாக இருக்கின்றது என்று மீரா இராசையா தனது உரையில் குறிப்பிட்டார். வேலையால் களைத்துப்போய் சோர்வுடன் வருபவர்களுக் மனச் சோர்வை நீக்க இந்த இதழ் ஒரு மருந்தாக அமைந்திருக்கின்றது என்று சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் பிரதம் விருந்தினரான ராதிகா சிற்சபைஈசனாலும், லோகன் கணபதியாலும் பாராட்டுப் பத்திரம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நிர்வாக ஆசிரியர் சிவா அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றிகூறி இந்த இதழை வெளியிடுவதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு விளம்பரதாரர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றோரின் ஆதரவு உள்ளவரை தொடர்ந்தும் வெளிவரும் என்பதில் தனக்குத் திடமான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து காரைக்குடி உணவகத்தின் சிறப்பான உணவு வகைகளோடு தமிழர்களின் பண்பாட்டு விருந்துபசாரம் நடைபெற்றது.

கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

kuruaravinthan@hotmail.com