-டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.
1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.
2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.
ஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.
டேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு?
இறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா… -நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு- என்றார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. சந்தேகப்படுதல் என்பது அறிவின் செயற்பாடு. சந்தேகப்படப்முடியா அறிவென்பது சாத்தியமில்லை.
இந்த அறிவுச் செயற்பாட்டுக்கு ஒரு –இடம்- வேண்டும் இந்தச் செயற்பாட்டை நீங்கள் உள்ளுதல் (சிந்தனை) எனக் கொள்வீர்களானால்..அது இருக்க வேண்டும். இல்லாத ஒன்று, ஒன்றையுமே செய்யமுடியாது ஆதலால் அது இருக்க வேணும். என்று சொல்லிவிட்டு… -உள்ளுகிறேன் ஆதலால் உள்ளேன் – என்றார்.
டேக்காட் இல்லாமல் எந்த அறிவுத்தொகுதியும் நகர்வதாயில்லை. கணிதத்தில் அவர் செய்தது –தெக்காட்டுப் பெருக்கம்- என அழைக்கப்படுகிறது
உளவியலில் –இருமைவாதத்தை- அவர் நிறுவியவிதம் அற்புதம். உடலுக்கும் உளத்துக்கும் என்ன தொடர்பு என்பதை- ஒரு இயந்திரத்தினுள் பேய் குடி கொண்டால் எப்படியிருக்குமோ அப்படி என்றார்.
இருப்பு வாதத்தின் தந்தையும் அவரே. இவருக்கு முதல் இருப்புவாதம் என்கிற பேச்சு எழவில்லை. எழுந்தது டென்மார்க்கில். (சோர்ன் கியக்கக்கோட் பின்னாளில் அது பற்றி பிறகு பேசலாம்) சந்தேகவாதமும் அப்படித்தான். ஏன் என்று கேட்டார்களே ஒழிய….அறிவைச் சந்தேகப்பட வைத்த மாமேதை.
தனிப்பட்டமுறையில் எனக்கு டேக்காட்டிடம் பிடித்தது எதையுமே சந்தேகப்படு. எதுவும் உறுதியான அறிவல்ல.