தமிழ் ஸ்டுடியோவின் 67வது குறும்பட வட்டம் – அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்…

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!12-09-2015 – சனிக்கிழமை, இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில். மாலை 4 மணிக்கு.

சிறப்பு அழைப்பாளர்கள்:
செயல்பாட்டாளர் சிவகாமி IAS
எழுத்தாளர் அழகிய பெரியவன்
பத்திரிகையாளர் அசோகன் (அந்திமழை)

நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழ் ஸ்டுடியோவின் 67வது குறும்பட வட்டத்தில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டு, படச்சுருளின் தலித் சினிமா சிறப்பிதழ் பற்றிய திறனாய்வுக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. படச்சுருள் வாசகர்களும், தமிழ் ஸ்டுடியோ பார்வையாளர்களும், குறும்பட இயக்குனர்களும் இந்த நிகழ்வில் பரவலாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரங்கம் சிறிதுதான் என்றாலும், அம்பேத்கர் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கூட வேண்டும். அப்படி பெருங்கூட்டம் கூடினால், இன்னொரு முறை பெரிய திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் ஸ்டுடியோ திரையிடும். நண்பர்கள் சனிக்கிழமை மாலை மறக்காமல் குறும்பட வட்டத்திற்கு வந்துவிடுங்கள்.

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
thamizhstudio@gmail.com