மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!
இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!
எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!
வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!
இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!
வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!
சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !
கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!
கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!
பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!
எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது
மனக்குறள்-10 பாரதியின் பாதை
அறம்பொருள் இன்பம் அகத்துள் இருநூல்
பகர்பத்தும் எட்டும் தொகை!
வீடுபேற் றொடுசேர்ந்து ஒன்றும் பதினெட்டும்
ஏர்பதி னெண்கீழ் நூல் !
பாட்டுக் கொருபுலவன் பாரதி என்றுநா
மக்கல் உரைத்தார் மதிப்பு !
பாரதி என்கவே பார்த்துச் சமஸ்தானம்
தேர்ந்தெடுத்தார் பட்டம் தெளிந்து !
நீடுதுயில் நீக்கவந்த மாபுலவ னேயென்கப்
பாரதியைத் தானுரைத்தார் பார்!
புதுக்க விதையென்ற பொங்குகவி யிட்டுப்;
படைத்த முதற்கவிஞன் பார் !
சுயசரிதை ஆக்கிச் செறிந்த உரையில்
புதியநடை யிட்டார் புகல்!
ஷெல்லிதாசன், காளிதாசன் உத்தம சீடனுடன்
சாவித்திரி யும்ஆனார் சால் !
இந்தியா, சுதேசமித்(தி)ரன் சக்கர வர்த்தினியாம்
என்றேடு கள்இட்டார் என்ப!
குருவாய் நிவேதிதா, நெல்லையப்பர் தானும்
உருவானார் சீடர் உணர்!
– vela.rajalingam@gmail.com