புதிய நூலகம் 9,10 செய்தி மடல்கள் வெளிவந்துள்ளன

புதிய நூலகம் 9,10 செய்தி மடல்கள் வெளிவந்துள்ளனபுதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன.  9 வது இதழில்  ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.

புதிய நூலகத்தின் 10 வது செய்திமடலில் ‘பத்தாயிரம் ஆவணங்கள் பல்லாயிரம் வாசகர்கள்’ என்ற செய்தியுடன்; பிரதீபா கனகா தில்லைநாதன் எழுதிய ‘மொழிசார் உலகு – கூட்டு வேலைகளது தேவை’ என்ற கட்டுரையும், ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற சி. கணேசமூர்த்தியின் நூலுக்கு பூ. நகுலன் எழுதிய நூல் அறிமுகமும், மறைந்த ‘மாவை வரோதயன் ’பற்றிய குறிப்பும், நற்கீரனின் ‘எழுதப்படாத அறிவு’ என்ற தகவற்குறிப்பும் இடம்பெற்றுள்ளன.

நூலக இணையத்தளத்திலிருந்து இலவசமாகவே pdf கோவையாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

kuneswaran@gmail.com