பாரதம்: அகிலேஷ் யாதவின் ஆட்சி உ.பியின் புதிய தொடக்கத்துக்கு விதை போடுமா….

உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு[ தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள்உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை  ஆதரித்து வந்த கிராம தலித்தலைவர்களை உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள். பல தலைவர்கள் படுகாயம்பட்டு மருத்துவமனையில் தாமாகவே சேர்ந்தார்கள், அவர்களுள் ஒருவர் உயிரிழந்தார்.

 இந்தச் சம்பவம் மார்ச் பதினைந்தாம் தேதி ஆக்ராவில் நடந்தது. பகுஜன்சமாஜ; கட்சியின் தலைவி மாயாவதி பாதல்புர் கிராமத்தை சேர்ந்தவர். இந்த பாதல்புர் கிராமம் மாயாவதியினுடைய கோட்டை என்று சொல்லலாம். இந்த கிராமத்தில் தலித்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அகிலேஷ் யாதவின் பதவிப்பிரமாணம் நடந்து முடிந்து, அடுத்த நாளைக்கு அவருடைய கட்சித் தொண்டர்கள் பாதல்புர் கிராமத்தில் நுழைந்து உருட்டுக்கட்டைகளால் தலித்துமக்களை சரமாரியாக அடித்து உயிர்போகுமளவு படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். சமாஜவாதி அரசு உ.பிக்கு கொலை, கொள்ளை, ஊழல் நிரம்பிய அதே அரசைத்தான் மீண்டும் கொடுக்கப் போகிறதா….. அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரத்தின்போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா….. இத்தனை வேள்விகளும் உ.பி மக்களுக்கு முன் ஒரு பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.

ஆகிலேஷ் யாதவின் அமைச்சகத்திலுள்ளவர்கள் பெரும்பாலோர் குற்றம் புரிந்தவர்கள், ஊழல் செய்தவர்கள், அதாவது அவர்கள் மீது குற்றச்சாட்டு வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றவாளிகள், ஊழல் மன்னர்கள் நிரம்பிய அகிலேஷ் யாதவின் அமைச்சர்களிடமிருந்து உ.பி மக்கள் அமைதியான ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா? அதற்கப்புறம் நேர்மை, நீதி கடமையுணர்வு, கரைபடியாத செயலகம் ஆகியவற்றைப் பற்றி யோசிப்போம். சாதாரண மனிதன் வேலைக்காக வீட்டைவிட்டு வெளியில் சென்று மீண்டும் உயிரோடு வீடு திரும்புவானா என்ற பயம் உ.பி மக்களை மறுபடியும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. உ.பி. மக்கள் அகிலேஷின் தன்னம்பிக்கையான தேர்தல் பிரசாரங்களைக் கேட்டு தப்பாக முடிவெடுத்து விட்டோமோ என்று நினைக்கவும் கூடும். உ.பியிலுள்ள கிராமங்களைச் சைக்களில் சுற்றியதோடு, அகிலேஷினுடைய நம்பிக்கையான பேச்சுக்கள், மக்களோடு மக்களாக கலந்து கொண்டு உரையாடிய போது அவர் மக்களுடைய மனதில் இடம் பிடித்தார். அகிலேஷ் யாதவ்,  தாம் மக்களுடைய தோழனென்றும், இந்த முறை தன்னுடைய கட்சி ஆட்சியமைத்தால் அந்த ஆட்சியில் கலங்கமில்லாத அமைச்சர்களை நியமிப்பதாகவும், அவரவர்கள்; தங்களுடைய ஊரில் சுதந்திரமாக செயல்பட முடியும், நடமாட முடியமென்றும், எங்கெல்லாம் தப்புத்தண்டாக்கள் நிகழ்கிறதோ அத்தகைய கொடுமைகளை இழைத்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கபடுமென்றும்…. இன்னும் இம்மாதிரி எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்து அப்பாவி மக்களை தன்னுடைய கைக்குள்ளே போட்டுக் கொண்டார். ஒருவேளை சோற்றுக்குகூட வழியில்லாமல் வாடுகின்ற வயிறுகளுக்கு போதிய உணவு கொடுப்பதாகவும், வேலையில்லாத கிராம மக்களுக்கு நு}று மணிநேர வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு ரூ. 12000 குறைந்தபட்ச  சம்பளமாக கொடுப்பதாகவும் இவ்வாறு இனிக்க இனிக்க பேசி உ.பி மக்களுடைய நாவில் தேனைத் தடவினார். மக்கள் அகிலேஷின் பேச்சில் மயங்கி மொத்த ஓட்டுக்களையும் அவருக்கு சமர்ப்பணம் செய்தார்கள். வெற்றிபெற்ற பிறகு அகிலேஷ் யாதவ், கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டார், எல்லாம் காற்றோடு பறந்து போயாச்சு….. இனி ஐந்து வருடத்துக்கு உ.பி மக்கள் பிணம்போல நடமாட வேண்டும், வெறும் மரக்கட்டைப் போலிருக்க வேண்டும். அகிலேஷின் கரைபடிந்த அமைச்சகம் மறுபடியும் ஊழலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, குற்றவாளிகள் நிறைந்த உ.பி அரசு மீண்டும் அராஜக ஆட்சிக்கு விதை போட்டுக் கொண்டிருக்கிறது.

உ.பியிலுள்ள கிராமங்களில் அதிகபட்சமான குழந்தைகள் வயிறு ஒடுங்கி, மெலிந்து, நலிந்து காண்கிறார்கள். ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுகிற குழந்தைகளுக்கு கணணி, மடிகணணி ஆகியவைகளை கொடுப்பதாக அகிலேஷ்யாதவ் வாக்குறுதி அளித்திருக்கிறhர். அந்தக் குழந்தைகளுக்கு இப்போதைய தேவை வெறும் ஒருவேளை சாப்பாடு, கணணி, மடிகணணி அல்ல. கிராமங்களில் முக்கால்வாசிக் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பை தொடுவதே சிரமமாகயிருக்கிறது. படிக்காத குழந்தைகளின் கைகளில் கணணியிருப்பது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போலிருக்கிறது. அவர்களுடைய பசியைத் தீர்ப்பதுதான் அகிலேஷ் யாதவின் பிரதான கடமையாகும். முன்பு ஆட்சியிலிருந்தபோது சமாஜவாதிகட்சி  கல்லூரி மாணவர்களை கட்சித்தொண்டுக்காக பயன்படுத்தியது, மறுபடியும் கல்லு}ரி மாணவர்களுக்கு இதே கதிதான். பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், போலிச் சான்றிதழ்கள் அச்சடிப்பதற்கும் உ.பி மாநிலம் பெயர் பெற்றது. இந்தியா, இந்தியமக்களை திருத்த வேண்டுமென்கிற நினைப்புக்கு வித்திடாமலிருப்பது மிகவும் நல்லது, அப்படியே நினைத்து செயல்பட்டால் படு முட்டாள்தனம், இது அன்னா ஹசாரேவுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

sandhya_giridhar@yahoo.com