குணா ஷக்தியின் ‘உண்மையான வணக்கம்’ (The Real Salute) என்னும் குறும்படத்தை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் . கிரண்பேடி I.P.Sஇன் நடிப்பில் குணா ஷக்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம் இதுவரையில் 17 விருதுகளை வாங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. கூறவந்த விடயத்தை மிகவும் வீரியத்துடன் வெளிப்படுத்தும் குறும்படம். அத்துடன் படம் முழுவதும் Grayscaleஎஇல் இருக்க , தேசத்தின் கொடி மட்டும் வர்ணத்தில் துலங்கும் உத்தியானது குறும்படத்தின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது. குப்பையோடு குப்பையாகக் கிடக்கும் கொடியினைக் காணும் ஒவ்வொருவருக்கும் நெற்றிப்பொட்டில் அறைந்ததுமாதிரியிருந்திருக்கும். ‘தாயின் மணிக்கொடி பாரீர்! நெஞ்சு பொறுக்குதில்லையே! என்னும் பாரதியின் வரிகள்தான் உடனடியாக நினைவுக்கு வந்தன. கொடி இந்தியாவினுடையதாகவிருந்தாலும் இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தத்தமது தேசத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாது. தேசப்பற்றினை இவ்வளவு அழகாக வலியுறுத்தும் இக்குறும்படத்திற்குப் பல்விருதுகள் கிடைக்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தமிழ்த் திரைப்படமொன்றினையும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் குணா ஷக்தி. குறும்படத்தின் இவரது வெற்றி பெரும்படத்திலும் தொடர வாழ்த்துகள். மேற்படி ‘உண்மையான வணக்கம்’ குறும்படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கே அழுத்தவும். இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி: shakthichellam@gmail.com . ‘செல்’ பேசி இலக்கம்: 09884571566 [ தகவல்: குணா ஷக்தி; shakthichellam@gmail.com ]