[பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். – ஆசிரியர் -]
From: thiyagarajan solai
To: ngiri2704@rogers.com
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM
Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா
ஆசிரியர்-பதிவுகள்
அனபுடையீர், வணக்கம்
எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே!
உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar
0095 943042105.
To: பதிவுகள் – கிரிதரன்
Sent: Monday, January 07, 2013 9:59 AM
Subject: தமிழியல் – இணையமுகவரி மாற்றப்பட்டுள்ளது
வணக்கம் ந.கிரிதரன், உங்கள் பதிவுகள் இணையத்தில் தமிழியல் ஆய்விதழிற்கு இணைப்புக் கொடுத்துள்ளீர்கள் – நன்றி. அதில் சிறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம். http://www.ulakaththamizh.org/default.aspx என்பதைத்தான் முதலில் ஆய்விதழிற்கான தொடக்க இணைய முகவரியாக வைத்திருந்தோம், தற்பொழுது அதனை http://www.ulakaththamizh.org/JOTS.aspx என்றவாறு மாற்றவேண்டி வந்துள்ளது. மாற்றியும்விட்டோம். நீங்கள் கொடுத்துள்ள இணைப்பு வந்து பின்னர் அதில் உள்ள தமிழியல் என்ற இணைப்பில் உள்ள வரவேண்டும். நேரடியாக வர விரும்புகிறவர்களுக்கு http://www.ulakaththamizh.org/JOTS.aspx என்பதுதான் சரியாக இருக்கும். இதை உங்கள் இணைப்பிலும் மாற்றிவட்டால் நல்லது. – து.குமரேசன் [தகவலுக்கு நன்றி குமரேசன். – கிரிதரன்]
From: “Swaminathan Venkat” <vswaminathan.venkat@gmail.com>
To: “Nav Giri” <ngiri2704@rogers.com>
Sent: Sunday, December 30, 2012 4:09 AM
பதிவுகள் உலகம் பூராவும் எழுதப்படும் தமிழ் எழுத்துகளை பல மடங்கு அறிந்திருக்கிறது. அதை உடன் நினைவு கொள்ளவும் முடிகிறது. எப்படி, கிரிதரன் இவ்வளவும் உங்களால் செய்ய முடிகிறது? பதிவுகள் இருப்பதால் உங்களை இவையெல்லாம் வந்தடைகின்றன சரி. ஆனால் அவ்வளவையும் படித்து நினைவு கொள்ளவும் வேண்டுமல்லவா. அது எப்படி சாத்தியமாகிற்து? உங்களுக்கு முன் என் தலைவணக்கம்.
From: Duraikumaran Subbaiah
Sent: Sunday, December 23, 2012 1:21 PM
Subject: நன்றி
அன்புள்ள பதிவுகள் ஆசிரியருக்கு வணக்கம். பதிவுகள் இதழில் தங்களது வாழ்த்துச் செய்தியி்னைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி. அன்புக்கு நன்றி.
From: Jayanthi Sankar
To: Nav Giri
Sent: Sunday, December 16, 2012 8:14 PM
Subject: [Bulk] Re: சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்
அன்புள்ள வ.ந.கிரிதரன், வணக்கம். பதிவுகளில் சென்று பார்த்தேன். எத்தனை அரும்பெரும்பணி ! பாராட்டுகள் ! உலகின் அத்தனை நாடுகள்/கண்டங்களிலிருந்தும் தமிழிலக்கியம் குறித்த கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. சுமார் 8-9 ஆண்டுகளாகவே, படைப்புகள் மட்டுமின்றி ஆரோக்கியமான விவாதங்களுடன் விளங்கும் பதிவுகள் என் மனதிற்குப் பிடித்த இணைய இதழ்களுள் ஒன்றாகவே இருந்து வருகிறது. வாழ்த்துக்கள். மிக்க நன்றி. அன்புடன், ஜெ
From: Duraikumaran Subbaiah
To: ngiri2704
Sent: Saturday, December 15, 2012 10:54 AM
Subject: நன்றியும் கவிதையும்
அன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியருக்கு வணக்கம். தங்கள் இதழ் உட்பட “தமிழ் இணைய இதழ்கள்“ என்ற தலைப்பில் ஆய்வு செய்துவந்த நான் வாய்மொழித் தேர்வு முடிந்து முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதனை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆய்வுக்கு உதவிய தங்களுக்கும் தங்கள் இதழுக்கும் பிற இதழ்களுக்கும் இதன் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. ஆய்வுக்கட்டுரையினை விரைவில் அனுப்பி வைக்கிறேன். நன்றி. – துரைக்குமரன்
Thanks for putting out a summary of the about my fathers book and its launching function in Pathivugal.
Thanks
Bala
Professor, University of Cincinnati College of Medicine
231 Albert Sabin Way
Cincinnati, OH 45267-0558
Phone: (513)558-3819
FAX: (513)558-0750
e-mail: Ambi.bala@UC.EDU
From: Yarlelakiyakuviyam Jaffna
To: ngiri2704@rogers.com
Sent: Monday, October 15, 2012 10:31 PM
Subject: வாழ்த்துகள்
அன்புடையீர் ஆசிரியர் , பதிவுகள் – தமிழ் இலக்கிய துறைக்கு தாங்கள் ஆற்றிவரும் பணி தொடர வாழ்த்துகள்! அன்புடன் – வேலணையூர்-தாஸ்
From: “S T kunran” <stkunran@gmail.com>
To: <ngiri2704@rogers.com>
Sent: Friday, September 21, 2012 6:45 AM
Subject: புத்தக அறிமுகவிழா
அன்புக்குரிய திரு கிரிதரன் அவர்கட்கு, வணக்கம், நான் காரை சுந்தரம்பிள்ளையின் மகன் திருப்பரங்குன்றன். எனது தந்தையின் ஏழாம் ஆண்டு நினைவு தினமும் எனது புத்தக வெளியீட்டு விழா பற்றியும் தங்கள் இணையத் தளத்தில் பதிவு செய்தமைக்கு எனது அன்பு கலந்த நன்றி.
என்றும் அன்புடன்,
சு.திருப்பரங்குன்றன்…