கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.

பாரதி கலைக் கோயில் மாணவர்கள் கனடாவில் மட்டுமல்ல, இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என்று சமீபத்தில் உலகெல்லாம் அவர்கள் இசைப்பயணம் மேற்கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததைப் பலரும் அறிந்ததே. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மாணவர்களோடு 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதி கலைக்கோயில் இன்று வளர்ந்து கிளைபரப்பி இசைத் தாகத்தைத் தீர்க்கும் கற்பகதருவாய் நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு திரு. எஸ். மதிவாசனும் அவரது மனைவியான அமரர் பவதாரணி மதிவாசனுமே முக்கிய காரணமாக இருந்தனர். ‘இசைத்தாய்’ என்று மாணவர்களால் பாராட்டப்பட்ட பாரதி கலைக் கோயில் அதிபர் பவதாரணியின் திடீர் மறைவு மாணவர்களுக்கும், இசைப்பிரியர்களுக்குப் பெரியதொரு இழப்பாக இருந்தாலும் அந்த இழப்பை நிவர்த்தி செய்து பாரதி கலைக் கோயிலைத் தொடர்ந்தும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை திரு. எஸ். மதிவாசனையும், அவரது உதவியாளர்களையுமே சேரும்.  பாரதி கலைக் கோயிலின் பெயரை அமரர் பவதாரணியின் நினைவாக ‘பவதாரணியின் பாரதி கலைக் கோயில்’ என்று பெயர் மாற்றப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயம் மட்டுமல்ல, அமரரின் கடின உழைப்பிற்குச் சமர்ப்பணமாகவும் அமைந்திருக்கிறது.

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தபேலா, ட்றம்ஸ், கிட்றார், கீபோர்ட் போன்ற நுண்கலைத் துறைகளில் மாணவர்கள் கற்ற நெறிகளில் இருந்து திறன் காணல் நிகழ்வு இடம் பெற்றது. இதைவிட தமிழ், தியானம், யோகாசனம், வீடியோ படப்பிடிப்பு, போன்ற பல நுண்கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன. இந்த மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக இருந்த பாரதி கலைக் கோயில் ஆசிரியர்களும், தன்னார்வத் தொண்டர்களுமான நிசாந்தன் பாலகுமார், லசாந்தி ராஜ்குமார், மாலினி பரராஜசிங்கம், கிரிதரன் சச்சிதானந்தம், காண்டீபன் ரங்கநாதன், குகன் சிவசுப்ரமணியம், சஹானா ராஜசிங்கம், துபாரகன் சோதிலிங்கம், பிரவீன் மதிவாசன், பவித்ரா இரத்தினசிங்கம், மற்றும் கலைக்கோயில் அதிபர் மதிவாசன் சீனிவாசகம் ஆகியோரும், உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றும் குயின்சி சோமசேகரம் நயனி இராமகிருஷ்னன், தட்சணன் உதயகுமார், செந்தூரன் மாணிக்கவாசகர், திவாகர் பாலயோகேஸ்வரன் ஆகியோரும், மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறப் பின்னணியில் நின்று பாடுபட்ட நிலா முரளிதரன், யாழினி அருள், இரத்னேஸ்வரன், தன்னார்வத் தொண்டர்கள், பெற்றோர்கள் ஆகியோரும்  பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் ரொறன்ரோவைச் சேர்ந்த பல கல்விமான்களும், பல்வேறு துறைசார் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ. கனகசபாபதி, திரு. திருமதி பேராசிரியர் இ. பாலசுந்தரம், எழுத்தாளர்களான திரு. திருமதி குரு அரவிந்தன், கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் த. சிவபாலு, கதிர் ஒளி ஆசிரியர் இராஜபாண்டியன் போல்ராஜ், நாடக நெறியாளர் சாந்திநாதன், மூத்த கலைஞரும் நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன், சிந்தனைப்பூக்கள் திரு. திருமதி பத்மநாதன், கலைஞர் மனுவல் ஜேசுதாசன், பேராசிரியர்களான திரு. திருமதி சுப்ரமணியன், நாடகக் கலைஞர் புராந்தகன், சினிமா கலைஞர் திருமதி பவானி, வேலாயுதபிள்ளை, இராசநாயகம், சிவநாயகமூர்த்தி, நந்தீஸ்வரர், கலாநிதி சிவகணேஷநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.

பாரதி கலைக்கோயில் நிறுவனர் திரு.எஸ்.மதிவாசனின் வழிநடத்தலில் திரு. டாக்டர் கதிர் துரைசிங்கம் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடத்தினார். இவர்களுடன் ஏனைய தன்னார்வத் தொண்டர்களும், மாணவர்களும், பெற்றோர்களும்  விழா சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்டனர். வருடாவருடம் நடக்கும் இத்தகைய திறன் காணல் நிகழ்வுகள் மூலம் பாரதி கலைக் கோயில் நிறுவுனர் அமரர் இசைத்தாய் திருமதி பவதாரணி மதிவாசனின் கனவுகள் அக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நினைக்க எமக்கும் பெருமையாக இருக்கிறது.

இத்தகைய இசை நிகழ்வுகள் எம் இளம் சந்ததியினருக்கு பல கோணங்களிலும் உதவியாக இருப்பது மட்டுமல்ல, அவர்களது திறமைகளை அடையாளம் கண்டு அவர் தம் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற இசைக் கல்லூரிகள் தொடர்ந்தும் புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாகச் சேவையாற்றி, எனது மொழி, பண்பாடு, கலாச்சாரம், இசை, நுண்கலை, போன்றவற்றைப் பேணிக்காக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம். தாம் கற்ற கலையை திறன் காணல் நிகழ்வின் மூலம் சபையில் சமர்ப்பித்துப் பலரின் பாராட்டையும் பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த பெற்றோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.

maliniaravinthan@hotmail.com