கற்புவாழ்க்கையில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரியக்கூடிய சூழல்கள் நேரிடும். அப்படி தலைவன் தலைவியைவிட்டு பிரியக்கூடிய பிரிவுகள் வேந்தன் பொருட்டுப் பிரிவுää பொருள்வயிற்பிரிவு என இருவகைப்படும். ‘வினையே ஆடவற்கு உயிரே’ என்பதால் வினையின் அவசியத்தைத் தமிழர் உணர்ந்திருந்தமையைக் கற்பு வாழ்க்கை குறித்த சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன. இவ்வகையில் சங்க அகஇலக்கியப் பாடல்களுள் அடங்கும் கற்பு பற்றிய பாடல்களுள் ‘வினைவயிற் பிரியுமுன்’ கூற்று நிகழும் பாடல்களைத் தொல்காப்பியச் செய்திகளுடன் ஒப்பிட்டு இவ்வியல் ஆராய்கிறது. வினை மேற்கொள்வதற்குமுன் பிரிந்தால் ஏற்படும் துன்பம் கண்டு கலங்கி தலைவன், தலைவிää தோழி ஆகிய மூவரும் பேசுவர். வினைவயிற்பிரியுமுன் தான் மேற்கொள்ள இருந்த வினையைத் தவிர்தல் வேந்தற்குற்றுழி பிரிவில் நிகழாது. பொருள்வயிற் பிரிவிலேயே தவிர்தல் நிகழும்…..மேலும் வாசிக்க