மூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிரேம்ஜி கனடாவில் காலமானர்!

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில்   17-11-1930   ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும்  கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர  இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.    அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள்     நாமக்கல்  கவிஞர்  -வி.க.  வா.ரா-  சுவாமிநாத சர்மா  –  குயிலன், – பேராசிரியர் ராமகிருஷ்ணன்  – தமிழ் ஒளி முதலானோரின்  தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும்  இயங்கிய ஞானசுந்தரன்     அங்கு  கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம்  திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின்  தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின்  தேசாபிமானி  – மற்றும் சுதந்திரன் முதலான     இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

தேசாபிமானியில் அவர் அக்காலப்பகுதியில் எழுதிய தேசபக்தன் கண்ணோட்டம் என்ற பத்தி எழுத்து வாசகர்களை பெரிதும்  ஈர்த்தது. 1954 இல்  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு  அல்லும் பகலும் தொண்டாற்றினார். சுயநலமற்ற தன்முனைப்பு  உணர்வுகளற்ற பொது நோக்குடன் அவர் இயங்கியதனால் மாற்றுக்கருத்துள்ளவர்களும்  அவரை நேசித்தனர். அந்த நேசிப்பே அவரை தொடர்ந்தும் பல வருடகாலமாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கச்செய்தது. பிரேம்ஜி என்ற     புனைபெயரில் அவர் எழுதத் தொடங்கியது முதல் பிரேம்ஜி ஞானசுந்தரன்  என்ற பெயரிலேயே அவர் அழைக்கப்பட்டார். சங்கத்தின் கிளை அமைப்புகளான எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், அறிவுவட்டம் முதலானவற்றையும் உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கூடிய திட்டங்கள் – மற்றும்  தமிழகத்தின் வணிக இதழ்கள் மற்றும்     தரக்குறைவான இதழ்களை இலங்கைக்கு தருவிப்பதில் கட்டுப்பாடுகள்  விதிக்கும் நடைமுறைகளை அமுல்படுத்துவதிலும் யாழ். பல்கலைக்கழக   வளாகம் உருவாக்கப்பட்டபொழுது  அதன் முதல் தலைவராக பேராசிரியர் கைலாசபதியை  நியமித்தல் தொடர்பான ஆலோசனைகளிலும் பிரேம்ஜி மிக முக்கிய பங்காற்றியுள்ளார். சோவியத் தூதரகத்தின் சோவியத் நாடு சோஷலிஸமும் தத்துவமும்  – சக்தி  – முதலான இதழ்களிலும்  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை  இலக்கியம் இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். சிறந்த பத்திரிகையாளருக்கான சோவியத்தின் லெனின்   விருதும் அவருக்கு  கிடைத்துள்ளது. இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல இலக்கியம்  மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு, முதலானவற்றில் பிரேம்ஜியின் கடுமையான உழைப்பு குறிப்பிடத்தகுந்தது.

1971   முதல்   1975  வரையில்  இலங்கை தமிழ் ஆலோசனைச்சபையிலும் யாழ். பல்கலைக்கழக அமைப்புக்குழுச்செயலாளராகவும்  – இலங்கை பத்திரிகைக்குழுவில் உறுப்பினராகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஆலோசனைச்சபையின் உறுப்பினராகவும் இயங்கிய  கால கட்டத்தில் பல ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தார்.  சில உலகநாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். அவரது பிரேம்ஜி கட்டுரைகள்  நூல் 2008  இல் வெளியாகியது.

கனடாவுக்குச்சென்ற தமது இரண்டு பெண் பிள்ளைகளின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்றார். அவரது புலப்பெயர்வு இலங்கை     தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகவே கருதப்பட்டது. புலம்பெயர்ந்தாலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தம்மாலியன்ற ஆதரவையும்   அவர் வழங்கத்தவறவில்லை. அவரது எழுத்துலகப்பிரவேச பொன்னாண்டை  முன்னிட்டு அவரது இலக்கிய  நண்பர்கள் 1998 இல்     கனதியான தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் சில மாதங்களுக்கு முன்னர் சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களை பாராட்டிக் கௌரவிககும் நிகழ்வை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய அமைப்பு நடத்தியபொழுது பிரேம்ஜியும் பராட்டப்பட்டார். தமது மனைவியைம் மக்கள் மருமக்களையும் ஒரு பேரக்குழந்தையையும் உலகெங்கும் வாழும் அவரை நேசித்த இலக்கிய நெஞ்சங்களையும் விட்டு விட்டு அவர் நிரந்தரமாக விடை பெற்றுவிட்டார். எம்மிடம் எஞ்சியிருப்பது அவர் பற்றிய நீங்காத நினைவுகளே.
                            
letchumananm@gmail.com