நூல் வெளியீடு: வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும்.! தொகுப்பாசிரியர்கள்: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் ‘வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.’.  பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேற்படி விழாவில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ‘வெளி’ ரங்கராஜன், ஜெயமோகன், செங்கதிர், திலகபாமா, செங்கதிர், அரவிந்தன் நீலகண்டன், பா.அகிலன், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

சிறப்புரை
நாஞ்சில்நாடன்
‘வெளி’ ரங்கராஜன்
ஜெயமோகன்
செங்கதிர்
திலகபாமா
அரவிந்தன் நீலகண்டன்
பா.அகிலன்
வெங்கட் சாமிநாதன்

நிகழ்ச்சி தொகுப்பு
திருமதி சித்ரா

இடம்
தேவனேய பாவாணர் நூலகம்
அண்ணா சாலை, சென்னை

தேதி: 19.03.2011
மாலை 5.30 மணி

வரவேற்புரை
பி.எஸ்.ஆனந்தன்

நூல் வெளியிடுபவர்
திரு. கி.ஆ.சச்சிதானந்தம்
முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவர்
திரு. கே.எஸ்.சுப்ரமணியன்

நன்றியுரை
செளந்தரராஜன்

தகவல்: திலீப்குமார்
Dilip Kumar dhwanibooks@gmail.com