கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை  சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்துப் போகிறார்கள். இவ்வாண்டு நடைபெற்ற மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் மது எதிர்ப்பு, போதை எதிர்ப்பு  கருத்துக்களை மையமாக்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு பரிசு பெற்றவர்கள்:

சுப்ரபாரதிமணியன் ( குப்பை உலகம் ) கட்டுரைத்தொகுப்பு,  இளசை சுந்தரம் ( தியாக சீலர் கக்கன்) , அய்க்கன்  ( நக்கீரர் ) ( கட்டுரைத்தொகுப்புகள் ) ,  தி.நா.நாராயணன் ( தோற்றப்பிழை),  ரமேஷ் ( முத்தா ) ,சிறுகதைத் தொகுப்புகள் ,  பூர்ணா ( முளைகட்டிய சொற்கள் ), கவிபாலா ( நீர்ப்பசி ) , திலகபாமா கவிதைகள் பாரதன் தலைமையிலான  குழு சிறப்பாகவும் ஆர்வத்துடனும் 35 ஆண்டுகளாக பாரதி இலக்கியப் பேரவையின் செயல்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

subrabharathi@gmail.com