கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6 -வது ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 -ம் திகதி (02 – 10 – 2014) நாமக்கல்லில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றோருக்கான சான்றிதழ் – விருதுச் சின்னம் – பணமுடிப்பு ஆகியன வழங்கப்படவுள்ளன.
முதன்மை விருது – பணமுடிப்பு – ரூபா ஒரு இலட்சம் – பேராசிரியர் அருணன் – (தமிழகம்)
நாவல் – ”குடை நிழல்” – தெளிவத்தை ஜோசப் – (இலங்கை) – 10000 ரூபா
சிறுகதை – தலா 10000 ரூபா
1. ”தவிக்கும் இடைவெளிகள்” – உசாதீபன் – (தமிழகம்)
2. ”இப்படியுமா” – வி. ரி. இளங்கோவன் – (பாரிசு)
3. ”ஜயந்தி சங்கர் கதைகள்” – ஜயந்தி சங்கர் – (சிங்கப்பூர்)
4. ”வெந்து தணிந்தது காலம்” – மு. சிவலிங்கம் – (இலங்கை)
கட்டுரை – 10000 ரூபா – ”நூல் தேட்டம்” – என். செல்வராஜ◌ா – (இலண்டன்)
வாழ்நாள் சாதனை – மலையக கலை இலக்கிய மக்கள் பணி – 10000 ரூபா – அந்தனி ஜீவா – (இலங்கை)
மொழிபெயர்ப்பு – தலா 10000 ”நள்ளிரவின் குழந்தைகள்” – கா. பூரணச்சந்திரன் – (தமிழகம்)
”பாலநில ரோஜா” – உபாலி லீலாரத்தினா – (இலங்கை)
தமிழ்ப்பணி – பெங்களூர் தமிழ்ச் சங்கம் – 5000 ரூபா
விருது பெறும் வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுதி இந்தி மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.