பத்திரிக்கைச் செய்தி : நாவல் ஆய்வரங்கம்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ என்ற புதிய நாவல் ஆய்வரங்கம் சனியன்று மாலை மகாகவி வித்யாலயா, இந்திராநகர், icic வங்கி அருகில்அவினாசி சாலையில் வி.மணி, மாநிலத்தலைவர் , அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை மாநில பொதுச்செயலாளர் தேனி விசாகன் பேசுகையில் “ சமூகப் போராளிகள் அவர்கள் வாழும் கால்த்திலேயே அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் . அவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக் இருந்தாலும், தன்னார்வத் தொண்டர்களாக இருந்தாலும், சமூகப்பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பது துயரமானது. சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போராளிகளும், செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் “ என்றார்.
சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த ”புத்துமண் “ நாவல் சொல்கிறது. இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 120 விலை ரூ 100
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஏற்புரையில் : நவீன முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களை அக்கறையுடன் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். முதலீட்டாளர்கள், .கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரை, மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக கார்ப்பரேட் சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும் என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை படைப்புகள் மூலம் வலியுறுத்துகிறோம்.. முதலீட்டாளர்கள், கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.அதைக் கடைபிடித்தால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும் “
மருத்துவர் தன்மானன்: அன்பும் அறனும் வலிமையுள்ளதாக வாழ்க்கையில் கட்டமைக்கப்பட வேண்டும். நுகர்வு, தன்னல வாழ்க்கையிலிருந்து விலக இலக்கிய வாசிப்பு உதவும். சுயமரியாதை புள்ளி பெரும் தீயாக உருவெடுக்கும். அது வாழ்க்கைக்கு வழி காட்டும்
உதயம் பக்தவச்சலம்: சமூக வெறி உள்ளவனே கலைஞனாகிறான்.உடலால் நாம் இம்சைப்படுவதற்கும் நோய்களின் பரவலுக்கும் நாம் இயற்கைக்கு எதிராக செயல்படுவதே காரணமாகும். தனி மனிதனுள் ஏற்படும் மாற்றங்களே சமூக மாற்றத்திற்குக் காரணிகளாகும்.எதிலும் மனிதனுக்கு நிறைவுத் தன்மை இல்லாமல் போவதே சுற்றுச்சூழல் சீர் கேட்டிற்குக் காரணம்.எல்லா உயிர்களும் வாழக்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும். சுற்றுச்சூழல் கேட்டால் மனிதன் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் நோய்களால் அவதிப்படுகிறன்.
கவிஞர் கா. ஜோதி: பெரும் நாகரீகத்தை முன் வைத்த நொய்யல் இன்று சீரழிந்து விட்டது. அது சுற்றுச்சூழல் கேட்டின் ஒரு குறீடாகி விட்டது.
வழக்கறிஞர் ரவி: தொழில் நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் மனிதனை சகஜ வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்தி விட்டது.அதுவே வாழ்க்கையின் பெரும் துயரம்.
உதயம் பக்தவச்சலம், வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர் கா.ஜோதி ஆகியோர் புத்துமண் ”நாவலை ஆய்வு செய்து பேசினர்.
சத்தியநாராயணா வரவேற்புரை நிகழ்த்தினார். மணிபாலா, அறம் சிவகுமார், காங்கயம் தமிழ்ச்சங்க தலைவர் கனகராஜ், சம்மன் சவுந்திர்ராஜன், வழக்கறிஞர் சுகன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
செய்தி: உதயம் பக்தவச்சலம் ( தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை அமைப்புக்காக )
அனுப்பியவர்: subrabharathi@gmail.com