குடத்து விளக்காகவல்ல…..

vetha_new_7.jpg - 11.42 Kbகுடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!

நுண்மையாய்ப் பெண் இல்லம்  பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!

 

பெண்னைத் தாழ்த்தும் ஆண்மகன்,
பெண்ணிங்கு ஆணை மதிப்பதில்லை
என்ற குற்றப் பாசிகள் விலக்கி
மண்ணேற்க மதித்து நடக்கலாம்.
பெண்ணே தன்னிலை உயர்த்தல் உரிமை.
பெண்கள் தினத்தில் மட்டுமல்லை
என்றும் பெண்மனத் தாழ்வு நிலையழித்து
குன்றில் தீபமாகலாம்!…குடத்து விளக்காகவல்ல!….

7-3-2015
kovaikkavi@gmail.com