ஆய்வு: இரட்டைக்காப்பியங்களில் பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பு

ஆய்வுக்கட்டுரை!முன்னுரை
 பண்டைக் காலத்தில் தமிழில் நூல்கள் பல எழுந்தன. அந்நூல்களில் காப்பியமும் ஒன்று. பழங் காப்பியமாகக் கருதப்படுவது சிலப்பதிகாரமாகும். இந்நூலினைத் தொடர்ந்து எழுந்தது மணிமேகலை. சிலப்பதிக்காரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையிலும் காணப்படுவதால் இவை ‘இரட்டைக்காப்பியம’; என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரட்டைக்காப்பியங்களில் படைக்கப்பட்டுள்ள பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

துணைமை மாந்தர்கள் – விளக்கம்
 காப்பியம் என்பது தனியொருவரின் கதையினைக் கூறி முடிப்பதல்ல. அது ஒரு சமுதாயத்தையே காட்டக்கூடியது. பலர்கூடி வாழும் கூட்டுறவு வாழ்வாகிய உலக வாழ்வில் சமுதாயம் என்பது பல்வேறுபட்ட மக்கள் கூடிவாழும் அமைப்பாகக் காணப்படுகிறது.

 உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட தலைவன் அல்லது தலைவியைச் சுற்றி அக்குறிக்கோளை அடையப் பல நிலைகளில் துணை செய்வார்கள் துணை மாந்தர்கள்.

 இலக்கியத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரும் தலைமை மாந்தராக இருப்பதற்கும் அவர்களின் சிறப்பை விளக்கிக் காட்டுவதற்கும் காப்பிய நிகழ்வுகள் படைக்கப்படுகின்றன. துணைமை மாந்தர்களை காப்பியத்தில் அமைத்து அவற்றின் இயல்புக்கேற்றவாறு ஒழுகிப் படிப்பவர் மனதைக் கவர வேண்டும். இம்மாந்தர்கள் காப்பியத்தில் கதை நிகழ்வோடு தொடர்புள்ளவர்களாகவும் தலைமை மாந்தரை மேம்படுத்துபவர்களாகவும்ää பண்பினை வெளிப்படுத்துபவர்களாகவும் அமைத்துக் காட்டப்படுகின்றன. இரட்டைக்காப்பியத்தில் பெண் துணைமை மாந்தர்களை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

1. சிலப்பதிகாரத்தில் வரும் துணைமை மாந்தர்கள்ää(தேவந்தி மாதிரிää ஐயைää சாலினிää கவுந்தியடிகள்ää கோப்பெருந்தேவி) ஆகியோர்கள்.
2. மணிமேகலையில் வரும் துணைமை மாந்தர்கள்ää (சுதமதிää காயச்சண்டிகைää அறவணடிகள்ää இராசமாதேவி) முதலியவர்கள் ஆவார்.
3. இரண்டு காப்பியத்திலும் வரும் துணைமை மாந்தர் வயந்தமாலை ஆவாள்.

தேவந்தி
 சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி கண்ணகியின் தோழியாகக் காப்பிய ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கண்ணகியும்ää தேவந்தியும் எந்த சூழ்நிலையில் தோழியானார்கள் என்பதைக் காப்பியத்தில் ஆசிரியர் சுட்டவில்லை. கோவலன்ää கண்ணகி மகிழ்ச்சியான வாழ்க்கையின் போது தேவந்தி  பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை. கோவலன்ää கண்ணகி பிரிந்து சென்றப் பிறகு கண்ணகிக்குத் தோழியாக இருப்பதாகக் காப்பியத்தில் ஆசிரியர் புனைகிறார். தேவந்தியை அறிமுகபடுத்தும்போது பாசண்டசாத்தன் மனைவி என்று அறிமுகம் செய்வதை,

 “தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
  பூந்த உண்கண் பொறுக்கொன்று மேவித்தன்
  மூவா இளநலங் காட்டிஎம் கோட்டத்து
  நீவா வெனவுரைத்து நீங்குதலும்”    (சிலம்பு.9 : 34-36)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

தேவந்தி தன் உள்ளத்திலே ஒன்றியிருந்த கணவன் பிரிந்துபோக மீண்டும் தன்னுடன் இணைய வேண்டும் என்று புனித நீராடல் செய்தாள். அப்புனித நீராடலைச் செய்யும்போதுää கண்ணகியின் நிலையை நினைத்துää அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றுää கோவலன் பிரிந்து சென்றதற்கு வருந்திää அவன் மீண்டும் உன்னுடன் ஒன்று சேர வேண்டும். அதற்கு அறுகம்புல்ää சிறுபூää நெல் முதலியவற்றை தூவி ‘கண்ணகி நீயும் பிரிந்த உன் கணவனைப் பெறுவாய்’ என்று வாழ்த்துகிறாள். இவ்விடத்தில் தன் தோழியின் துன்பத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதாக தேவந்தியின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை, “தேவந்தியின் படைப்புää கண்ணகியின் நோக்கம்ääஇயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு ஏற்றதாய் அமைந்துள்ளது.”( சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்ää ப.158) க.மீனாட்சி சுந்தரம் தமது நூலில் கூறுகிறார்.
 
 வாழ்த்துக் காதையிலும் தேவந்தியைப் பற்றிய செய்தியை ஆசிரியர் பதிவு செய்கிறார். கண்ணகியைக் காணää கண்ணகியின் செவிலித்தாய்ää தோழி,  தேவந்தி ஆகிய மூவரும் வருகின்றனர். மேலும் அதே காதையில் செங்குட்டுவனிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தும்போது கண்ணகியின் பெருமையைக் கூறி அவளுடைய தோழி நான் என்று கூறுவதை, “முடி மன்னர் மூவருங் காத்தோம்பித் தெய்வ

வடபே ரிமய மலையிற் பிறந்து
கடுவரற்கங்கைப்புனலாடிப்போந்
தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர்                                                                                   சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்”        (சிலம்பு.29 : 5 பாடல்)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன. தேவந்தி என்ற பாத்திரம் கண்ணகியின் பெருமைகளையும்ää பண்பையும் கூறித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதாக இவ்விடத்தில் ஆசிரியர் காட்டுகிறார்.

 தேவந்தியிடம் கண்ணகி தான் கண்ட கனவு பற்றிக் கனாத்திறம் உரைத்தக் காதையில் கூறுகின்றாள். அக்கனவை தான் பழித்தற்கு வருந்தி வாழ்த்துக் காதையில் புலம்புகிறாள். மேலும் மாதவிää மணிமேகலை ஆகியோர் துறவு வாழ்வு பற்றி வரம் தருங்காதையில் தேவந்தி சேரமன்னன் செங்குட்டுவனிடம் கூறுவதாக ஆசிரியர் படைத்துள்ளார்.

மாதரி
அடைக்கலக் காதையில் கோவலன்ää கண்ணகிää கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரையை நோக்கிச் செல்கின்றனர். கோவலன் நான் மதுரை சென்று வரும் வரையில் கண்ணகிக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை என்று கவுந்தியடிகளிடம் கூறுகின்றான். அப்பொழுதான் காப்பிய ஆசிரியர் மாதரியைப் பற்றிக் கூறுகிறார். தரும சிந்தனை மிக உடைய துறவியர் நிலைத்து வாழும் புறஞ்சேரிப்பகுதியில்  உள்ள பூப்போலும் கண்ணுடைய இயக்கி என்னும் பெண் தெய்வத்துக்கு பால்சோறு படையல் செய்து விட்டுத் திரும்பும் இடையர்குலப் மூதாட்டியான மாதிரி என்பவள் எதிர்வந்த கவுந்தியடிகளை வணங்குவதாகக் காட்டுகிறார்.

 மாதரியைப் பற்றி கோவலன் கண்ணகியிடம் சில கருத்துக்களை கவுந்தியடிகள் கூறுகிறார். பசுக்களைக் காத்துப் பராமரித்து அவைதரும் பயனைப் பிறகுத் தந்துதவி வாழும் இடையர்குல மக்களின் வாழ்க்கை இனிதானது. ஓர் தீமையும் இல்லாதது. எனவே இந்த மாதரியும் தீயவளல்ல. நல்லவளே! வயதில் மூத்தவளான இவள் அன்பும் கருணையும் உடையளாகவும் தெரிகிறாள். எனவே மாதரியின் பாதுகாப்பில் கண்ணகியை விடலாம் என்று கூறுகிறார். மேலும் இவ்விடத்தில் கண்ணகியின் பெருமையும்ää வணிகர் குலப்பெருமையும் மாதரிப் பாத்திரத்தின் வாயிலாகப் பேசப்படுகிறது. கண்ணகியை அடைக்கலப் பொருளாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவளைத் தன் மகள் போல் பேணிக் காக்கிறாள். “மாதரி ஆகிய முதுமகளுக்கு கோவலன் யார் என்று தெரியாது. ஆனால் கவுந்தியடிகளின் கட்டமைப்புக்கு அடிபணிந்து அவர்களை அன்புடன் அரவணைத்து பாதுகாப்பது அவளது கடமையாகும்”(ப.172) என்று தி.மகாலட்சுமிää ‘சிலப்பதிகாரத்தில் பெண’; தம் ஆய்வில் கூறியுள்ளார். மேலும் கண்ணகிக்கு ஏற்பட்டத் துன்பத்திற்கு வருந்துபவளாகவும் அத்துன்பம் தன்னால்தான் ஏற்பட்டது என்று எண்ணி இறந்த நிலையும் சிலப்பதிகார நீர்படைக்காதையில் மாடல மறையோன் கூற்று வாயிலாக ஆசிரியர் கூறியுள்ளார்.

ஐயை
 ஐயை மாதரியின் மகள் ஆவாள். அடைக்கலக் காதையில் கண்ணகிக்கு உதவி செய்ய மாதரி ஐயை அனுப்பி வைப்பதாக ஆசிரியர் காட்டுகிறார். ஐயையை கண்ணகிக்கு ‘நாத்தூண்’ என்று உறவு முறையுடன் அழைப்பதாக காட்டப்பட்டுள்ளது. கண்ணகித் துன்பத்திற்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணி இறந்த செய்தியை நீர்படைக்காதையில் கூறியுள்ளார்.

சாலினி
 வேட்டுவ வரியில் சாலினி பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறார். சாலினியை கொற்றவை போல் அலங்காரம் செய்து மறவர்களுக்கு அருள்மொழிகளைக் கூறுகிறாள். அப்படி கூறிக் கொண்டிருக்கும்பொழுது கோவலன்ää கண்ணகிää கவுந்தியடிகள் ஆகிய மூவரும் அங்கு வருகின்றனர். அப்போது கொற்றவை தோற்றத்தில் இருந்த சாலினிää கணவனோடு அங்கே இருந்த கண்ணகியைச் சுட்டி மணம் நிறைந்த கூந்தலை உடைய இந்தப்பெண் கொங்கு நாட்டின் செல்வம் ஆவாள். இவள் குடமலை ஆளும் தலைவிää தென் தமிழ் நாட்டுப்பெண் உலகு செய்த தவத்தால் தோன்றியவள். இவ்வுலகுக்கு ஒளி தரவந்த மாணிக்கம் போன்ற உயர்ந்த திருமகள் இந்தப் பெண்மணி என்று கூறுகிறாள். இவள் கூற்றிலிருந்து கண்ணகி பிற்காலத்தில் தெய்வத்துள் தெய்வமாக வைக்கப்படுவாள் என்பதை இலைமறைக்காயாக  இப்பாத்திரத்தின் வழி காப்பிய ஆசிரியர் எடுத்தியம்புகிறார். இச்செய்தியைää முனைவர் க.மீனாட்சி சுந்தரம் தம் நூலில் கூறும்பொழுதுää “தெய்வமாகப் போகும் கண்ணகியை ஒரு தெய்வமேறிய பெண் சுட்டிக் காட்டுகிறாள். இது நம் உள்ளத்தைப் படிப்படியே பக்குவப்படுத்துவதற்கு நல்ல வழியாம்.”(சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்ää ப.233)என்கிறார். இப்பாத்திரம் கண்ணகியின் எதிர்காலத்தை முன்கூட்டியே உலகிற்கு எடுத்துரைப்பதற்காக படைக்கப்பட்ட பாத்திரமாகும்.

கவுந்தியடிகள்
 கவுந்தியடிகள் ஒரு சமணத்துறவி ஆவார். பல சமண சமயக் கருத்துக்களை இவர் கூற்று மூலம் ஆசிரியர்; வெளிப்படுத்துகிறார். இளங்கோவடிகளால் படைக்கப்பட்ட பாத்திரங்களுள்  கவுந்தியடிகள் சிறந்த அறிவு நலம் வாய்ந்தவர். கவுந்தியடிகள் பாத்திரம் நாடுகாண் காதையில் அறிமுகப்படுத்துகிறார். கோவலன்ää கண்ணகி மதுரை செல்லும்போது வழித்துணையாக வருகிறார் அப்பொழுது அவருடைய சமண சமய பற்றும் ஈடுபாடும் எடுத்து கூறப்படுகின்றன. கண்ணகியின் தன்மைää மென்மைää ஆகியவை கவுந்தியடிகள் கூற்று வாயிலாக காப்பியத்தில் வெளிப்படுகின்றன. சரளா இராசகோபலன்ää “கவுந்தியடிகளை வழித்துணை என்ற அளவோடு நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால்ää கவுந்தியடிகள் கதைத் தலைவன் தலைவியரின் வாழ்க்கையோடு இணைந்தது மட்டுமின்றிää அவர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விடுகின்ற தன்மையினைச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.”1 என்று (இலக்கியம் ஒரு பார்வைää பக்.33-34) தம் நூலில் கூறியுள்ளார்.

 கோவலன் கண்ணகி ஆகியோரின் துன்பத்தை எண்ணி வருந்தி உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாக நீர்படைக் காதையில் மாடலமறையோன் சேரமன்னனிடம் கூறுவதாகக் காட்டுகிறார். கவுந்தியடிகள் சிலப்பதிகாரத்தோடு பின்னிப் பிணைந்து சமண சமயக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை மறைமுகமாக இளங்கோவடிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

கோப்பெருந்தேவி
 பாண்டிய மன்னன் மனைவி கோப்பெருந்தேவி ஆவாள். தன் கணவன் பிழை செய்ததை எண்ணிää தன் கணவன் இறந்தவுடன் தானும் இறப்பதுதான் சரி என எண்ணி உயிரைப் பிரித்தவள். இவளுடைய பாத்திரப்படைப்பில் ஆசிரியர் கற்புடைய பெண்களின் தன்மையைக் காட்டுகிறார். மேலும் எம். நாராண வேலுப்பள்ளை தம் நூலில் “மங்கையரின் மாசு மறுவற்ற பெண்மையின் தன்மையை மன்பதையில் நிலைநாட்டியவர் அப்பெருமாட்டி”2 (சிலம்பும் மேகலையும்ää ப.46.) என்று கூறுகிறார்.

சுதமதி
 மணிமேகலையின் தோழி ஆவாள். இவள் கூற்று மலர்வனம் புக்ககாதையில் ஆசிரியரால் வெளிப்படுகிறது. மணிமேகலையை நல்வழிப்படுத்தி அறவழியில் செல்வதற்குச் சுதமதியின் பங்கு மணிமேகலைக் காப்பியத்தில் இன்றியமையாததாக உள்ளது.
சுதமதி உதயகுமரனிடம் உடம்பின் நிலையாமையை எடுத்துக் கூறியும் மணிமேகலையின் மீது உதயகுமரன் கொண்டுள்ள காதல் தவறு என்பதையும் எடுத்துக்காட்டும் பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மணிமேகலையைää மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்கு எடுத்துச் சென்றதற்குத் தன் உயிரை பிரிந்ததாக எண்ணி வருந்துபவளாக சுதமதி காணப்படுகிறாள் இதிலிருந்து மணிமேகலையிடம் சுதமதி கொண்ட நட்பின் ஆழத்தை ஆசிரியர் உணர்த்துகிறார். முற்பிறவில் மாதவிää மணிமேகலை ஆகியோர் தன் சகோதரிகள் என்று எண்ணி துறவு வாழ்க்கையில் அவர்களுடன் சேர்ந்தே இருப்பதாக காஞ்சிமாநகர் புக்க காதையில் படைத்துள்ளார்.
காயச்சண்டிகை

 காயச்சண்டிகை காஞ்சனன் மனைவிää இவள் விருச்சக முனிவனின் சாபத்தால் ‘யானைப் பசி’ என்பதனைப் பெற்றாள். ஐயை பாத்திரத்தில் கற்புடைய பெண்கள் இடும் உணவைதான் முதலில் ஏற்க வேண்டும் என்று காயச்சண்டிகை கூறி மணிமேகலைக்குக் கற்பில் மேற்பட்ட ஆதிரையைக் காட்டி அவளிடம் ஐயைப்பாத்திரத்தில் உணவு பெறச் செய்கிறாள். பின்பு மணிமேகலை இட்ட உணவில் யானைப் பசி நீங்கியவளாக அவளிடத்திற்குச் செல்கிறாள்.

அறவணடிகள்
 அறவணடிகள் ஒரு பௌத்தத் துறவி. மணிமேகலைக் காப்பியம் முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் இவருடைய கூற்றிலிருந்து வெளிப்படுகிறது. மணிமேகலைக்கு அறவுரைக் கூறியும் மணிமேகலை நெறிதவறும் இடங்களில் அறிவுரைக் கூறியும் வழிநடத்திச் செல்பவராகக் காப்பியம் முழுவதும் காட்டப்படுகிறது.

 அறவணடிகள் கூற்றில் ஆபுத்திரன் வரலாறுää அட்சய பாத்திரத்திரன் வரலாறுää ஆகியவை ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகிறது. இறுதியில் மணிமேகலைக்கு அறவுரை கூறி துறவு ஏற்கவும் செய்கிறார். பௌத்தமதக் கருத்துக்கள் இருவருடையக் கூற்றில் விரிவாக ஆசிரியரால் பேசப்பட்டுள்ளது.

இராசமாதேவி
 மாவண்கிள்ளியின் மனைவியும் உதயகுமரனின் தாயுமானவள் இராசமாதேவி. இவள் தன் மகன் உதயகுமரன் இறந்ததற்கு மணிமேகலைதான் காரணம் என்று எண்ணிää அவளை பல நிலைகளில் கொடுமை செய்கிறாள். மணிமேகலையின் தவத்தன்மையை அறிந்து இராசமாதேவிää தான் செய்தது தவறு என்று எண்ணி மணிமேகலையிடம் வருந்துகிறாள். இராசமாதேவிக்கு மணிமேகலை உடம்பின் நிலையாமையை எடுத்துக்கூறியும்ää சில அறவுரைகளையும் எடுத்து கூறியும் அவளை அறநெறியில் செல்ல வழிக்காட்டுகிறாள்.

வயந்தமாலை
 வயந்தமாலை பற்றிய செய்திகளை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையிலும் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் ஊரலருரைத்த காதையிலும் குறிப்பிட்டுள்ளார். வயந்தமாலை மாதவியின் தோழி ஆவாள். மாதவியின் பண்புகள் வெளிப்படுத்துவதற்கு முக்கியக் கருவியாக வயந்தமாலை சிலப்பதிகாரத்தில் படைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

 மாதவிää கோவலன் ஆகியோரின் வருத்தத்தைப் போக்குபவளாகவும் அவர்கள் சேர்ந்து வாழ பல வழிகளில் முயற்சி செய்பவளாகவும் இளங்கோவடிகளால் காட்டப்படுகிறாள். வேனிற்காதையில்  கோவலன்ää மாதவியைப் பற்றி பழித்துரைத்த போதும் மிகவும் பொறுமையுடன் காணப்படுவதாகப் படைக்கப்பட்டுள்ளாள். மாதவிää கோவலன் ஆகியோரின் பிரிவு துயரத்திற்கு வருந்துபவளாகவும் காணப்படுகியாள்.

 மணிமேகலைக் காப்பியத்தில் வயந்தமாலைää இந்திரவிழா நடைபெறும் பொழுது மாதவியும் மணிமேகலையும் வராததை எண்ணி வருந்தி வயந்தமாலை அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறாள். மாதவிää தன் காதல் கணவன் கோவலன் பற்றியும்ää கண்ணகி கோவலன் இறந்தது பற்றியும் கூறி வருந்துகிறாள். அவளுடைய வருத்தத்தைப் போக்கி ஆறுதல் மொழிகளைக் கூறுபவளாக ஊரலருரைத்த காதைää மலர்வனம்புக்கக் காதை ஆகியவற்றில் வயந்தமாலை பாத்திரத்தைச் சாத்தனர் படைத்துள்ளார்.

முடிவுரை
•சிலப்பதிகாரத்தில் தேவந்தியின் பாத்திரம் கண்ணகிக்குத் துன்பம் ஏற்பட்டபோதெல்லாம் ஆறுதல் கூறித் தேற்றுபவளாக இவளுடைய பங்களிப்பு உள்ளதைக் காணமுடிகிறது.
•மாதரிää ஐயை இருவரும் கண்ணகியின் மீது மிகவும் அன்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பேசும் இடங்களிலெல்லாம் கோவலன்ää கண்ணகி மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டை உணர முடிகிறது.
•சாலினி பாத்திரத்தின் மூலம் கண்ணகியின் பெருமையையும் அவள் பிற்காலத்தில் அடையப்போகும் சிறப்பையும் எடுத்துரைக்க இப்பாத்திரத்தை ஒரு கருவியாக ஆசிரியர் படைத்துள்ளதை அறிய முடிகிறது.
•கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி வழிக்காட்டியாக உள்ளதையும் இவர் கூற்று மூலம் சமணக் கருத்துக்கள் வெளிப்படுவதையும் காணமுடிகிறது.
•கற்பின் தன்மையை நிலைநாட்டும் பாத்திரமாக கோப்பெருந்தேவி பாத்திரம் அமைந்துள்ளது.
•சுதமதிää மணிமேகலையை வழி நடத்துபவளாகவும் துறவு வாழ்க்கைக்கு இட்டு செல்பவளாகவும் படைக்கப்பட்டுள்ளதை பாத்திரத்தின் வழி அறிய முடிகிறது.
•காயசண்டிகையின் சாபம் மணிமேகலையால் நீக்கப்பட்டது என்பதையும் இராசமாதேவி தன் மகன் உதயக்குமரன் இறந்தது மணிமேகலையால் தான் என்ற எண்ணம் தவறு என்பதை உணர்வதாக இக்காப்பியத்தின் வழி அறிய முடிகிறது.
•அறவணடிகள் மணிமேகலை துறவு வாழ்க்கைக்கு வழி நடத்திச் செல்பவராகவும் பௌத்த அறங்களை எடுத்துரைப்பவராகவும் மணிமேகலை காப்பியத்தில் படைக்கப்பட்டுள்ளது.
•வயந்தமாலை பாத்திரத்தைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பேசப்பட்டுள்ளது. இப்பாத்திரம் முழுக்க முழுக்க மாதவியின் பண்புகளை வெளிபடுத்துவதாக படைக்கப்பட்டுள்ளது.