சமூகம் இயல் பதிப்பகம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்’ என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர் எம்.பெளசர் ‘இந்தத்தொகுப்புப் பிரதி, காந்தியம் தொடர்பான , டேவிட் ஐயா தொடர்பான ஒரு வரன்முறையான ஆய்வுப் பிரதியன்று. காந்தியம் தொடர்பாகவும், டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப்புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’ நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியிருக்கின்றார். நூலின் உள்ளடக்கம் பதிப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றதென்று நிச்சயமாக அடித்துக்கூறலாம்.
எட்டு கட்டுரைகளையும், கவிதையொன்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சிறு நூலின் கட்டுரைகளை எழுதியோர் விபரங்கள் வருமாறு: மு.பாக்கியநாதன் (‘டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப்பதிவு’), ஜென்னி ஜெயச்சந்திரன் (‘காந்தியத்தில் எனது நினைவுப்பதிவு (1979-1983), பீ.ஏ.காதர் (‘மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும்’), பீமன் (‘டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.’, வ.ந.கிரிதரன் (‘நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்’), விஜயகுமாரன் (கவிதை:’தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே! போய் வாரும் அய்யா!’), நிலாந்தன் (‘டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? ‘), இ.பூபாலசிங்கம் (‘நினைவு மீட்டல்’), மற்றும் ‘காந்தளகம்’ சச்சிதானந்தனின் ஆங்கிலக்கட்டுரை (David envisaged human emancipation through Tamil struggle’)
காந்தியம் அமைப்பு பற்றி, அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயா பற்றி, மருத்துவர் ராஜசுந்தரம் பற்றி, காந்தியத்தின் நோக்கம், வேலைத்திட்டங்கள் பற்றி எனக்காந்தியம் அமைப்பு பற்றிய பன்முகப்பார்வையினை இந்நூலின் கட்டுரைகள் வழங்குகின்றன.
பதிப்பகம் பற்றிய விபரங்கள்:
Art of Socio Publication (சமூகம் இயல் பதிப்பகம்)
166 Plum Lane, london , SE18 3HF, UK